• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் மாநகரம் பற்றிய வழிக்காட்டி
  2013-02-02 19:16:01  cri எழுத்தின் அளவு:  A A A   

நிலவியல் அமைவு

யாங்சி ஆற்று கழிமுகப்பிரதேசத்தின் முனையில அமைந்துள்ள ஷாங்காய் மாநகரம், பசிபிக் பெருங்கடலின் கிழக்கு பகுதியை ஒட்டியமைகிறது. அதற்குத் மேற்கில், ஜியாங்சு மற்றும் ட்சச்சியாங் மாநிலங்கள் இருக்கின்றன. ஹாங்சோ விரிகுடா, ஷாங்காயின் தென்பகுதிக்கு அருகில் உள்ளது. ஷாங்காயின் வட பகுதியில் யாங்சி ஆறு கடலில் கலக்கிறது. சீனாவின் மிகப் பெரிய வெளிநாட்டு வர்த்தகத் துறைமுகமும், மிகப் பெரிய தொழிற்துறைத் தளமுமான ஷாங்காய், சீனப் பெருநிலப்பகுதியின் பொருளாதாரம், நிதித்துறை, வர்த்தகம் மற்றும் கப்பல் போக்குவரத்து மையமாகவும் திகழ்கிறது. 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஷாங்காய் உலகப் பொருட்காட்சி, மாபெரும் வெற்றி பெற்றது, அத்துடன் ஏற்பட்ட செல்வாக்கு முதலிய பல வழிமுறையில், மென்மேலும் அதிகமானோர், ஷாங்காயை அறிய வந்துள்ளனர். எனவே, ஈர்ப்பாற்றல் மிகுந்த நகரமாக, ஷாங்காய் பார்க்கப்படுகிறது.

1 2 3 4 5 6 7 8 9 10
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040