இவ்வாண்டின் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டி மற்றும் சீனத் தேசிய மக்கள் பேரவைக் கூட்டத் தொடர்கள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன.
அரசவை அமைப்புகளின் சீரமைப்பு, ஊழல் தடுப்பு, சுற்றுசூழல் மாசுப்பாடு தடுப்பு முதலியவை சூடான விவாத அம்சங்களாக இருக்கக் கூடும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது. அரசவை அமைப்புகளின் சீரமைப்பில் பிபிசி செய்தி நிறுவனம் பெரும் கவனம் செலுத்தியுள்ளது.
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டி மற்றும் சீனத் தேசிய மக்கள் பேரவைக் கூட்டத் தொடர்களின் மூலம், சீனாவின் புதிய தலைவர்கள் எதிர்க்காலததில் வளம், வலிமை, ஜனநாயகம் ஆகியவை வாய்ந்த சமூகத்தை உருவாக்குவர் என்று த அசோசியேட்ர்டு பிரஸ் கருத்து வெளியிட்டுள்ளது.