3000 பிரதிநிதிகள் மற்றும் ஹூ சிந்தாவ்-ம் ஷி ச்சின் பிங் ஆகியோருடன்
துவங்கி, கடந்த ஐந்தாண்டுகளில் சீனாவின் வளர்ச்சிப்போக்கு மிகவும்
மாறுபட்ட ஆண்டுகளாக சென்றதையும், நடப்பு அரசின் பணிகள் பற்றியும், சீனா
உலக நிதி நெருக்கடியின் பாதிப்பைச் சீன அரசு பயனுள்ள முறையில் சமாளித்து,
பொருளாதாரத்தினை சிறப்பாக வளர்ச்சியடையச் செய்ததையும், மக்களின் வாழ்க்கை
நிலையும், சமூகக் காப்புறுதி நிலையும், குறிப்பிடத்தக்க அளவில்
உயர்ந்துள்ளதையும் வென் ச்சியா பாவ் நினைவு கூறியது அருமை. கடந்த ஐந்து
ஆண்டுகளில் சீனா பல்வேறு சாதனைகளை பெற்றிருந்தாலும், சீன பொருளாதாரம்
மற்றும் சமூக வளர்ச்சியிலுள்ள சிக்கல்களையும் பிரச்னைகளையும் வென் ச்சியா
பாவ் ஏற்றுக்கொண்டது பாராட்டும்படி உள்ளது. எனது பாராட்டுகளுடன்,
இனிவரும் ஆண்டுகளிலும், சிக்கல்களை சிதைத்துவிட்டு, முழுமையான ஆக்கங்களை
மக்களுக்கு வழங்க வேண்டும் என்னும் கோரிக்கையினை நான் முன்வைக்கின்றேன்.