• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனத் திரைப்படங்களின் சிறந்த வளர்ச்சி; 510கோடி யுவான் வருமானம்
  2013-04-17 17:50:33  cri எழுத்தின் அளவு:  A A A   

இவ்வாண்டு முதல் காலாண்டில் சீனத் திரைப்படங்களின் வருமானம் 510கோடி யுவானைத் தாண்டியுள்ளது. சந்தைப் பங்குகளில் இது 69விழுக்காடு வகிக்கிறது. முதல் காலாண்டுக் காலத்தில் சீனத் திரைப்படத்துறை அடைந்த மிக சிறந்த சாதனை இது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் திரைப்படத் தயாரிப்பில் 3வது இடத்தையும், திரைச் சந்தையளவில் 2வது இடத்தையும் வகிக்கும் நாடாக சீனா விளங்குகிறது. அதேவேளையில், உலக திரைப்படத் துறையின் அதிவிரைவான வளர்ச்சியையும் அதிக சந்தை வாய்ப்பையும் பெற்றுள்ள நாடாகவும் சீனா திகழ்கிறது என்று தெரிய வருகிறது.

2012ஆண்டு சீனாவின் சொந்த தயாரிப்புத் திரைப்படங்களின் சீட்டு வருமானம் 1700கோடி யுவான் என பதிவாகியுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040