
எடுத்துக்காட்டாக, எமது ஒலிபரப்பு நிகழ்ச்சியிலும் இணையதளத்திலும் செய்திகள், பண்பாடு, சுற்றுலா, சீனக் கல்வி ஆகிய தகவல்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கும். மேலும், சீனாவைப் பற்றி மட்டுமே என்ற நிலைமாறி, பன்னாட்டுப் பண்பாடு, சுற்றுலா துறை தொடர்பான தகவல்கள் தொகுக்கப்பட்டு வழங்கப்படும். தவிர, சுற்றுலா, அறிவியல், வணிகம் துறைகள் சார்ந்த பயனுள்ள தவகல்கள் வெளியிடப்படும். அதன் மூலமாக, இணையதளத்தில் உலா வரும் போது, நேயர் நண்பர்கள் பயன் பெறலாம். அதிக துறைகளில் உள்ள வேறுபட்ட கருத்துக்கள் உங்களுக்கு கொடுக்கப்படும். சீனாவில் சுற்றுலா மேற்கொள்ள அல்லது சீனாவில் வர்த்தகம் செய்ய, இந்த தகவல்கள் உங்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றோம்.
ஒலிபரப்பு நிகழ்ச்சி, இணையதள வளர்ச்சி ஆகியவற்றில் தமிழ்ப் பிரிவு கடந்த 50 ஆண்டுகளாக முக்கியமாக ஈடுபட்டுள்ளது. கால ஓட்டத்துக்கு ஏற்ப மேலதிக வடிவிலான ஊடக படைப்புகளைத் தயாரித்து கொடுக்க இருக்கிறோம். செய்திகள், சுற்றுலா, அறிவியல் தவகல்களை விட, ஈர்ப்பு மிகுந்த ஊடகத் தயாரிப்புக்களை கொண்டு வருவோம். சீனாவில் பண்டை இலக்கியம், புகழ்பெற்ற புதினம், சீனத் திரைப்படங்கள், சீனத் தொலைக்காட்சி நாடகம் ஆகியவற்றை தமிழ் மொழியில் வழங்குவோம்.
எமது முயற்சிகளைக் கண்டு, எதிர்காலத்தில் நேயர் நண்பர்கள் இனிய அதிர்ச்சியடைவர் என்று மிகவும் எதிர்பார்க்கிறோம்.




அனுப்புதல்