• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:சீனாவின் சிறுபான்மை தேசிய இனப் பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வங்கள்
  2014-01-09 10:09:56  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனா, சில ஆயிரம் ஆண்டுக்கால வரலாற்றை கொண்டுள்ள நாடாகும். நீண்டக்கால வரலாற்றுப் போக்கில் விவேகமான சீன மக்கள், ஒளிவீசும் பண்பாடுகளை உருவாக்கி, பரவலாக்கியுள்ளனர். சீனா பரந்துபட்ட நிலப்பரப்புடைய நாடாகும். சீனாவிலுள்ள பல்வேறு பிரதேசங்களில், தனிச்சிறப்பு வாய்ந்த பண்பாடுகள் பரவி வருகின்றன. சீனாவில் ஹான் இனமும், 55 சிறுபான்மை தேசிய இனங்களும் கூட்டாக வாழ்கின்றன. ஒவ்வோர் இனத்துக்கும் தனிச்சிறப்பு மிக்க பண்பாடு இருக்கிறது.

சீனத் தேசிய இன விவகார ஆணையமும், சீனப் பண்பாட்டு அமைச்சகமும் கூட்டாக நடத்திய "சீன சிறுபான்மை தேசிய இனப் பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வங்களின் கண்காட்சி வாரம்" 2013ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாள் பெய்சிங்கிலுள்ள தேசிய இனப் பண்பாட்டு மாளிகையில் துவங்கியது. சீனாவில் சிறுபான்மை தேசிய இனங்களின் பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வங்களை மையமாக வைத்து பெரிய ரக கண்காட்சி நடத்தப்பட்டது இதுவே முதன்முறை.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040