• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
42வது ஜெனீவா பன்னாட்டு கண்டுபிடிப்புப் பொருட்களின் கண்காட்சி
  2014-04-17 10:46:49  cri எழுத்தின் அளவு:  A A A   

ஜெனிவா பன்னாட்டு கண்டுபிடிப்புப் பொருட்களின் கண்காட்சி, 40 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இது, உலகில் செல்வாக்கு மிக்க கண்டுபிடிப்புப் பொருட்களின் கண்காட்சிகளில் ஒன்றாகும். உலகில் 45 நாடுகளிலிருந்து சுமார் 800 பங்கேற்பு நிறுவனங்கள் இக்கண்காட்சியில் கலந்துக்கொண்டன. மொத்தமாக, 1000 புதிய அறிவியல் தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகள் அதில் காட்சிக்கு வைக்கப்பட்டன. இந்த புதிய கண்டுபிடிப்புச் சாதனைகள், பலதரப்பட்ட துறைகளுடன் தொடர்புடையவை. தொழிற்துறை, மருத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வேளாண் தொழில் நுட்பம், அன்றாட வாழ்க்கை முதலிய துறைகள் இதில் இடம்பெறுகின்றன. இந்தச் சாதனைகளில், 42விழுக்காடு ஐரோப்பாவிலிருந்து வந்தவை. 54விழுக்காடு ஆசிய மற்றும் மத்திய கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்தவை. இக்கண்காட்சிக்கான மேலாளரின் உதவியாளர் அன்னி ரோர்ஷிசேர் அம்மையார் எடுத்துக்கூறியதாவது:

எங்களை பொறுத்தவரை, 42வது ஜெனிவா பன்னாட்டு கண்டுபிடிப்புப் பொருட்களின் கண்காட்சி, மிகவும் மகிழ்ச்சி தந்துள்ளது. பல புதிய வரலாற்றுப் பதிவுகள் இக்கண்காட்சியில் வருவாவது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக, 45 நாடுகளைச் சேர்ந்த 790 பங்கேற்பு நிறுவனங்கள் இதில் கலந்துக்கொண்டன. காட்சி அரங்கத்திலுள்ள அனைத்து இடங்களிலும் பங்கேற்பு நிறுவனங்கள் நிரம்பியுள்ளன. இதை நினைத்து கூட பார்க்கவில்லை என்றார் அவர்.

இக்கண்காட்சியில், பல மிக முக்கிய கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, ஸ்வீஸ்லாந்து உயிரி ஆற்றல் தொழில் நிறுவனங்கள் தந்த உயிரி ஆற்றல் வாகனத்தை பார்க்கின்றோம். அதன் வெளிப்புற பகுதியின் மூலப் பொருட்கள், லினின் எனும் ஒரு வகை சணல் இழை துணி மற்றும் வாழை தோலால் உருவாக்கப்பட்டுள்ளது. விசை பொறி இயந்திரம் பயன்படுத்தும் எரிப்பொருள், உயிரி குப்பைகளிலிருந்து சுத்திகரிக்கப்பட்டு எடுக்கப்பட்டது. முழு வாகனத்தின் எடை, 25கிலோகிராம். அது மட்டுமல்ல. 100 கிலோமீட்டர் செல்ல தேவையான எரிபொருள் அளவு, 0.1 லிட்டர் மட்டும் தான். செளதி அரேபியாவின் பங்கேற்பு நிறுவனத்தின் கம்பி இணைப்பில்லா மருத்துவக் கண்காணிப்பு கருவியைப் பார்க்கின்றோம். இந்தக் கருவி, Wi-Fiஎனப்படும் கம்பி இணைப்பில்லா இணைய வசதி மூலம், பெரிய மற்றும் சிறிய இரு திரைகள் இணைக்கப்பட்டுள்ளன. மருத்துவச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு பல்வகை இணைப்பு மின்சார கம்பிகளால் ஏற்படும் பாதிப்பை இது குறைக்கும். மேலும், ஈரான் பங்கேற்பு நிறுவனம் வழங்கிய தானியங்கு மதி நுட்ப திருட்டு தடுப்பு தொகுதி, தொடர்புடைய படங்களை உடனடியாக பதிவுச் செய்து, காவற்துறைக்கு எச்சரிக்கை அனுப்ப முடியும்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040