• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
லீ இனக் கைவினை துணி தயாரிப்பு திறன் கையேற்றல்
  2014-07-22 11:26:51  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் ஹெய்நான் மாநிலத்தின் குவோ சிங் இடை நிலைப்பள்ளியிலுள்ள சிறுபான்மை தேசிய இனப் பாரம்பரிய கைவினை நுட்ப வகுப்பறையின் சுவர்களில், தலைசிறந்த லீ இன துணி கைவினைப் படைப்புகள் நிறைந்து காணப்படுகின்றன. Mo Zheng Kai என்னும் மாணவர், லீ இனப் பாணி வாய்ந்த துணியைப் பின்னிக் கொண்டிருந்தார்.

"லீ இனத் துணி தயாரிப்பு திறனைக் கற்றுக்கொள்ளும் துவக்கத்தில் இத்திறன் கடினமாக இருந்தது. உண்மையில், நிறைய பொறுமையுடன் இத்துணியைப் பின்னுவது கடினமாக இல்லை" என்று Mo Zheng Kai கருத்து தெரிவித்தார். "தற்போது, லீ இனப் பாணியுடைய துணியை பின்னுவதில் கைதேர்ந்தவர்கள் மேலும் குறைந்து விடக்கூடும் என்றும், இத்தொழில் திறனைக் கையேற்றுவது மிக முக்கியம்" என்றும் அவர் தெரிவித்தார்.

Mai Ming Zhen எனும் மாணவர் லீ இன துணியைப் பின்னும் திறனைக் கற்றுக் கொண்டு, ஒரு பாடத் தவணை ஆகிவிட்டது. தற்போது எளிமையான வடிவத்தில் லீ இனத் துணியை அவர் பின்னுகிறார்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040