• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வ வாரிசுகள்
  2014-07-29 08:44:56  cri எழுத்தின் அளவு:  A A A   
மூன்றாவது சீனத் தேசியப் பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வ வாரிசு விருது வழங்கும் விழா ஜூன் 6ஆம் நாள் நடைபெற்றது. சீனாவின் பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வ வாரிசுகள் 60 பேருக்கு விருது வழங்கப்பட்டது. .

இந்த 60 பேரில், குன்ச்சு என்னும் சீனாவின் பாரம்பரிய இசை நாடகக் கலைஞர், தாள் கத்தரிப்பு கலைஞர், சீனப் பாரம்பரிய மருத்துவ வாரிசு, கதைப் பாடல் கலைஞர் ஆகியோர் இடம்பெற்றனர். சீனக் கலை ஆய்வகத்தின் தலைவர் வாங் வென் ச்சாங் பேசியது போல், தாம் தேர்ச்சி பெற்ற கலைத் திறனை எதிர் தலைமுறையினருக்குக் கையேற்றி, அவர்கள் சமூகத்துக்குப் பங்காற்றியுள்ளனர். அவர்கள் கலையைக் கையேற்றும் போக்கில், இக்கலையை வளர்த்து, புதுப்பித்துள்ளனர்.

பெய்சிங் ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகத்தின் இலக்கியக் கல்லூரியின் பேராசிரியர் Xiao Fang பேசுகையில், தற்போது சீனாவின் பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வம் மீதான காப்பாற்றல் மற்றும் பாதுகாப்பு வளர்ச்சிப் போக்கு, பொருளாதார உலகமயமாக்கம், பண்பாட்டு ஒருபடித்தாக்கல் கியவற்றின் அறைகூவல்களை எதிர்நோக்கியுள்ளது. சீனாவின் பண்பாட்டுப் பாரம்பரியம், பண்பாட்டு மரபுச் செல்வம், இவற்றின் வாரிசுகள், இழந்து விட்டனர் என்றும் தெரிவித்தார்.

சீனாவின் முதலாவது தொகுதி தேசிய நிலை பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வ வாரிசு ஜுசுப் மாமாயி அண்மையில் மரணமடைந்தார். மனாஸ் என்ற கர்கஸ் இனத்தின் காவியத்தின் எட்டுப் பகுதிகளைப் பாட தெரிந்த ஒரே ஒரு கலைஞர் அவராவார். சில சமயங்களில் 20 நாட்களாக அவர் இக்காவியத்தைப் பாடுவார். சுமார் ஒரு நூற்றாண்டுக்காலத்தில் அவர் மனாஸ் என்னும் காவியத்தை சின்ச்சியாங்கிலிருந்து உலகிற்குப் பரவல் செய்தார். அதே வேளையில், அவரது வாழ்க்கை பழங்கதையாக மாறியுள்ளது. கர்கஸ் இன மொழி நூலான காவியம் மனாஸ், அவரது பாட்டு எழுத்துப் பிரதியின் அடிப்படையில் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. காவியத்தைச் சேர்ந்த 18 பிரதிகள் நிறைந்த எட்டு பகுதிகள் இந்நூலில் இடம்பெறுகின்றன. உலகிலுள்ள முதலாவது மிக முழுமையான அச்சுப் பதிப்பு இதுவாகும்.

சீனாவின் பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வ வாரிசுகள், சீனத் தேச நாகரீகத்தின் கையேற்றலுக்குப் பங்காற்றியுள்ளனர். கைவினை திறனைக் கையேற்றி, இளம் பின்வருவோரைப் பயிற்றுவிப்பது, இவ்வாரிசுகளின் பொறுப்பாகவும், பெருமையாகவும் இருக்கிறது என்று Xiao Fang தெரிவித்தார்.

Zhu Xian வட்டத்தின் மரப் பலகை ஓவியத்தின் அடையாளம் முக்கியத்துவம் வாய்ந்த வாரிசு Guo Tai Yunகிற்கு வயது 90. அவரால் வகைப்படுத்தி பிரிக்கப்பட்ட ஓவியங்கள், தொடர்புடைய துறை நிபுணர்களின் பாராட்டைப் பெற்றுள்ளன. அழைப்பை ஏற்று, அவர் சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பண்பாட்டுப் பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். யுனேஸ்கோ அமைப்பால், சீனாவின் நாட்டுப்புற கலைஞர் என்ற பெருமை அவருக்கு சூட்டப்பட்டுள்ளது. அவருக்கு சுமார் 50 மாணவர்கள் உள்ளனர். அவரது பல மாணவர்கள், சீனாவின் மாநில மற்றும் நகர நிலை பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வ வாரிசுகளாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

குன்ச்சு என்னும் சீனாவின் பாரம்பரிய இசை நாடக வாரிசு வாங் ஷி யூ, சீனாவின் ச்செ ச்சியாங் மாநிலத்தின் இசை நாடகத் துறையில் அடையாள முக்கியத்துவம் வாய்ந்த கலைஞராவார். Zhe Jiang மாநிலத்தின் பீக்கிங் இசை நாடகம் மற்றும் குன்ச்சு இசை நாடகத்தின் பாதுகாப்பு, கையேற்றல், பரவல் மற்றும் வளர்ச்சிக்காக அவர் பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். அவர் அதிக குன்ச்சு அரங்கேற்றுபவரை வளர்த்துள்ளார். அவர் பலமுறை ஹாங்காங், தைவான், அமெரிக்கா, ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட இடங்களில் நிகழ்ச்சிகளை அரங்கேற்றியுள்ளார். ச்செ ச்சியாங் Zhe Jiang மாநிலத்தின் குன்ச்சுக் கலை சீனாவிலிருந்து வெளியேறி, உலக அரங்கில் காலடி எடுத்து வைப்பதற்கு அவர் பாடுபட்டு வருகிறார்.

வாங் சியு லன் என்பவர், சீனாவின் Zhang Yi Yuan வணிக சின்னமுடைய மல்லிகைப்பூ தேயிலை தயாரிப்பு திறன் வாரிசு ஆவார். அவரது தலைமையில், Zhang Yi Yuan கூட்டு நிறுவனத்தின் விற்பனைத் தொகை, கடந்த சில ஆண்டுகளாக சீனாவின் தேயிலை விற்பனையில் முதலிடம் வகிக்கிறது.

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக, தேயிலை தயாரிப்பு மற்றும் விற்பனைத் துறையில் ஈடுபட்டுள்ளேன். சீனாவின் தேயிலை பண்பாட்டை வளர்த்து, பரவல் செய்ய பாடுபட்டு வருகிறேன். Zhang Yi Yuan என்னும் தேயிலை தொழில் சின்னத்தை உருவாக்குவதன் மூலம், தேயிலை பண்பாட்டை சீன மக்கள் குடும்பங்களில் உட்புகுத்தியுள்ளேன். நவீன தேயிலை பண்பாட்டின் மையக் கருத்து, பொது மக்களின் சிந்தனை, கண்ணோட்டம், எதிர்பார்ப்பு மற்றும் செயல் வடிவமாக மாற உதவி செய்துள்ளேன் என்று அவர் தெரிவித்தார்.

சிறப்பு துறை ஆய்வு ஆற்றல் நிலையை பெரிதும் உயர்த்தும் அடிப்படையில், சீனாவின் பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வ வாரிசுகள், கலையைப் புதுப்பித்து, கலையின் மிக தலைசிறந்த அம்சங்களை வெளிக்கொணர்த்து, காலத்தின் தேவைக்கு ஏற்ப, தனிச்சிறப்பு மிக்க பாரம்பரிய கலைத் திறனை வளர்க்கிறனர்.

சியாங் சி மாநிலத்தின் Jing De Zhen வட்டத்தின் கையால் பீங்கான் பொருள் தயாரிப்புத் திறன் வாரிசு Deng Xi Ping இத்துறையில் ஈடுபட்டு 50 ஆண்டுகள் ஆகி விட்டன. பீங்கான் பொருட்களைத் தயாரிக்கும் போக்கில், 40க்கும் மேலான புதிய ரக வண்ணமிகு மெருகிடப் பரப்பு வகைகளை அவர் உருவாக்கினார். சீனத் தேசிய அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்ற விருது, தேசிய கண்டுபிடிப்பு விருது, பன்னாட்டுக் கண்டுபிடிப்பு பொருட்காட்சி தங்க விருது ஆகிய பல பெருமைகள் அவருக்கு சூட்டப்பட்டுள்ளன. ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன் டாங் வம்சக்காலத்தில் 500 ஆண்டுகளுக்கு முன் மிங் வம்சக்காலத்தில் பீங்கான் பொருட்கள் தயாரிப்புச் செய்முறை ரகசிய குறியீட்டை அவர் கண்டறிந்தார். இந்த நுட்ப அடிப்படையில் அவர் தயாரித்த பீங்கான் பொருட்கள், பீங்காங் துறையில் புகழ் பெற்றுள்ளது.

திபெத்தின் டாங்கா கலை வாரிசு ரோபு ஸ்டா, சீனப் பாரம்பரிய ஓவியங்களிலுள்ள மனிதர், இயற்கைக் காட்சி மற்றும் காட்சி மண்டபங்களின் உருவம், வடிவமைப்பு மற்றும் ஓவிய முறைகளை டாங்கா ஓவியங்களில் வரைவதில் உட்புகுத்தினார். அவரது ஓவிய பாணி, பாராட்டைப் பெற்றுள்ளது. அழைப்பை ஏற்று, அவர் பேத்தலா மாளிகை சுவர் ஓவிய வரைவதில் பங்கெடுத்தார். சீனாவின் பல்வேறு இடங்களில் டாங்காவின் செல்வாக்கை விரிவாக்க அவர் பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளார். அவர் டாங்கா இணையத் தளத்தை நிறுவி, திபெத்தின் டாங்கா கலையின் வளர்ச்சியை தூண்டியுள்ளார். அவர் திபெத் டாங்கா ஓவியக் கழகத்தை நிறுவி, டாங்கா கலையின் பல்வேறு பாணிகளுக்கிடை பரிமாற்றத்தில் கலந்து கொண்டு கற்றுக் கொள்ள ஊக்கமளித்துள்ளார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040