இதுமட்டுமல்லாமல், எண்ணெய் விலையும் இயற்கை எரிவாயு விலையும் அடிக்கடி சேர்ந்து ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுகின்றன. இயற்கை எரிவாயு விலையின் குறைவினால், மக்கள் மேலதிக இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்துவதைத் தேர்ந்தெடுப்பர். இதன்விளைவாக சீனாவில் நிலக்கரியின் பயன்பாட்டு அளவும் குறையும். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு இது நல்ல தேர்வாகும்.
ஆனால், உலகச் சந்தையில் எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி, சீனாவின் சொந்த எண்ணெய் நிறுவனங்களுக்கு அதிக பாதிப்பினை ஏற்படுத்தும். எடுத்துக்காட்டாக, தாட்சிங் எண்ணெய் வயலின் உற்பத்தி சீனாவின் தரை எண்ணெய் வயல் உற்பத்தி அளவில் நான்கில் ஒரு பகுதியாகும். இவ்வாண்டு அதன் உற்பத்தி 15 இலட்சம் டன்னாக குறைக்கப்படுவதாக தாட்சிங் எண்ணெய் நிறுவனம் அண்மையில் அறிவித்தது.
நிலக்கரி மூலம் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி செய்யும் வேதியியல் துறை, மின்சார வாகனம், சூரிய ஒளியாற்றல் முதலிய புதிய எரியாற்றல் துறைகள் உயர் கச்சா எண்ணெய் விலை என்ற நிலைமையில் சீராக வளர்ச்சி அடைய முடியும். ஆகவே, எண்ணெய் விலை வீழ்ச்சி, அந்த தொழில் துறையின் வளர்ச்சியைப் பாதிப்பது தவிர்க்கப்பட முடியாது.