• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன உணவரங்கம்:இறால் பொரித்தல்
  2015-06-09 20:15:45  cri எழுத்தின் அளவு:  A A A   

ஜெயா....... இப்போது, தேவைப்படும் பொருட்கள் தயார். ஆயத்த பணிக்கு போகலாமா.

சக்திவேல்....... கண்டிப்பாக. முதலில், இறால்களின் ஓட்டை நீக்கி, சுத்தம் செய்யுங்கள்.

ஜெயா.......பிறகு, இறால்களின் மேல், உப்பு மற்றும் சமையல் மதுவை ஊற்றி, கலந்து, 5 நிமிடங்கள் ஊற வையுங்கள்.

சக்திவேல்.......இப்போது, கலப்பில், முட்டை, கோதுமை மாவு, ஸ்டார்ச் ஆகியவற்றைப் போடுங்கள்.

ஜெயா.......போட்ட பிறகு, இறால்களுடன் நன்றாக பிசைய வேண்டும். அப்போது இறால்கள் மீது மெல்லிய ஸ்டார்ச் படிந்திருக்குமாறு பிசைய வேண்டும். உதாரணமாக வாழைக்காய் பஜ்ஜி தயார் செய்வது போன்று.

சக்திவேல்.......இந்தத் மாவுத் தோல் மிகவும் அடர்த்தியாக இருக்க வேண்டாம். இல்லாவிட்டால், பொரிக்கப்பட்ட இறால்களின் சுவை பாதிக்கப்படும்.

ஜெயா.......பத்து நிமிடம் கழிந்த பின், சமைக்கப் போகலாமே.

சக்திவேல்.......வாருங்கள். முதலில், மிதமான தீயில் அடுப்பின் மேல் வாணலியை வையுங்கள்.

ஜெயா.......வாணலி சூடாகிய பின், உள்ளே எண்ணெயை ஊற்றுங்கள்.

சக்திவேல்.......எண்ணெயை மிதமாக சூடாக்குங்கள்.

ஜெயா.......தூய்மையான குச்சிகளை, எண்ணெயில் போடுங்கள். குச்சிகளின் முனைப்பக்கத்தில், சிறிய குமிழி கொஞ்சம் வேகமாக தோன்றிய போது, எண்ணெயின் வெப்பம் சரியாக காணப்படுகிறது.

சக்திவேல்.......இப்போது, இறால்கள் தனித்தனியாக சூடான எண்ணெயில் போட்டு, பொரியுங்கள்.

ஜெயா.......அனைத்து இறால்களையும் எண்ணெயில் போட்டு முடிந்தவுடன், உடனடியாக தலைகீழாக திருப்ப வேண்டும்.

சக்திவேல்.......இறால்களின் வண்ணம், மிதமான பொன் நிறமாக மாறும் போது, பெரிய தீயில் சில வினாடியாக பொரியுங்கள்.

ஜெயா.......இறால்கள் முழுவதும் பொன் நிறமாக மாறியதுடன், வெளியே சமையல் தாளில் எடுங்கள்.

சக்திவேல்.......அதிகமான எண்ணெயை நீக்கி, இறால்களை தட்டில் வைத்து, சாப்பிடலாம்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040