• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிறுபான்மை இனங்களின் 10-வது பாரம்பரிய விளையாட்டுப் போட்டி
  2015-09-09 14:08:01  cri எழுத்தின் அளவு:  A A A   

புல்வெளியிலுள்ள ஏர்டோஸ் நகரிலுள்ள நடைபெற்ற 10-வது விளையாட்டுப் போட்டியில், ya jia, யா ஜியா எனும் விளையாட்டு வகை, அதிக கவனத்தை ஈர்த்தது. பெய்ஜிங், ஹெ நான், திபெத், சின்ஜியாங், உள்மங்கோலியா முதலியவற்றைச் சேர்ந்த 27 பிரதிநிதிக் குழுக்களின் 146 வீரர்கள் இதில், கலந்து கொண்டனர். இந்த போட்டியில் கலந்து கொண்டோரின் எண்ணிக்கை, கடந்த முறைப் போட்டியில் இருந்ததை விட 30விழுக்காடு அதிகம். யா ஜியா என்பது, கயிறு இழுக்கும் போட்டி போன்ற ஒரு விளையாட்டு வகையாகும். வழக்கமான கயிறு இழுக்கும் போட்டி விளையாட்டை விட, அது தனிச்சிறப்புமிக்கது. இந்த போட்டி நடைபெறும்போது, வீரர்களின் தோல் பகுதியில் கயிறு போன்ற துணையைக் கட்டி வீரர்கள் இருவரும் எதிர் எதிர் புறம் இழுத்து தங்களது பலத்தை நிருபிப்பார்கள்.

இது, திபெத் மக்கள் வாழும் பகுதிகளில் பரவலாக காணப்பட்டுள்ளது. யா ஜியா விளையாட்டுப் போட்டியின் விதிமுறை மற்றும் தேவையான கருவி மிகவும் எளிமையாக இருக்கும். வயது மற்றும் பாலினம் தொடர்பான கட்டுப்பாடுகள் இல்லை. எனவே, பல்வேறு பிரதிநிதிக் குழுகள் இப்போட்டியில் ஆவலுடன் ஆக்கமுடன் பங்கேற்பர்.


1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040