• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
செங்டு
  2016-06-17 18:54:16  cri எழுத்தின் அளவு:  A A A   

செங்டு நகரிலுள்ள பாண்டா வளர்ப்புத் தளம் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பாண்டா உள்ளிட்ட அழிவின் விளிம்பிலுள்ள விலங்குகளைப் பேணிக்காக்க, சீன அரசு இவ்வளர்ப்புத் தளத்தை நிறுவியுள்ளது. பாண்டாவின் வளர்ப்பு, பாதுகாப்பு, சுற்றுலா, பண்பாடு முதலியவற்றை ஒன்றிணைக்கும் பாதுகாப்பு நிறுவனமாக அது விளங்குகிறது.

இத்தளம், செங்டு நகரின் வடக்குப் பகுதியிலுள்ள ஒரு மலையில் அமைந்துள்ளது. செங்டு நகரிலிருந்து சுமார் 10க்கும் அதிகமான கிலோமீட்டர் தொலைவிலுள்ள இத்தளத்தில், பாண்டாவுக்கான ஆய்வுக் கட்டிடம், ஆய்வகம், மருத்துவம், தங்கும் விடுதி, விளையாட்டு அரங்கம், அருங்காட்சியகம், சமையலகம் முதலியவை உள்ளன. பாண்டா வாழும் சுற்றுச்சூழலுக்கு ஏதுவான வகையில் மாதிரியில் இந்தத் தளம் கட்டியமைக்கப்பட்டுள்ளது. ஏரி, நதி, புல்வெளி மற்றும் மூங்கில் காடு மட்டுமல்ல, அங்கு மலை குழி, மரப் பொந்து முதலியவையும் உள்ளன. இயற்கை அழகைச் செயற்கையுடன் இனிதே ஒன்றிணைத்துக் கட்டியமைக்கப்பட்ட இத்தளம், விலங்குகளின் வளர்ப்புக்குச் சீரான சூழலை வழங்கியுள்ளது. 80க்கும் அதிகமான பாண்டாக்கள் உள்ளிட்ட அரிய விலங்குகள் அங்கு வாழ்ந்து வருகின்றன.

பாண்டாக்களுடன் நெருக்கமாகப் பழகுவது செங்டு பாண்டா வளர்ப்புத் தளத்தின் மிக முக்கியமான சிறப்பாகும். பாண்டாவுக்கான விளையாட்டு அரங்கத்தில், பல்வேறு வயத்திலுள்ள பாண்டாக்களின் வாழ்வு நிலையை நீங்கள் நேரில் பார்வையிடலாம். அன்பு மிக்க பாண்டாக்கள் தூங்குவதையும், அமர்ந்து கொண்டு இருப்பதையும், விளையாடுவதையும் கண்டு களிப்புறலாம். ஒவ்வொரு காட்சியும் உங்களுக்கு உற்சாகத்தைக் கொண்டு வரும். மேலும், பாண்டா குட்டிகளுக்கான அறையில், பாண்டா தாய், குட்டிகளுக்குப் பாலூட்டுவதைப் பார்வையிடலாம். பயணிகள் பாண்டாக்ளுடன் நெருக்கமாகப் பழகும் தலைசிறந்த சுற்றுலா இடமாகும் என்று இத்தளம் வெகுவாகப் பாராட்டப்பட்டுள்ளது.

சிச்சுவான் நாடகம்

சிச்சுவான் நாடகம், ஹான் இனத்தின் பாரம்பரிய நாடகங்களில் ஒன்றாகும். நடித்துக் கொண்டிருக்கும் போது முகத்தின் பாவணைகளை மாற்றுவது, நாடகத்தின் குறிபிடத்தக்க தனிச்சிறப்பாகும்.

நாடகத்தில் நடிப்பவர்களின் உணர்ச்சி மாற்றத்தை வெளிப்படுத்துவதைக் காட்டுகின்ற தொழில்நுட்பமாக இது கருதப்படுகிறது.

பழங்காலத்தில், முகத்தில் பல்வேறு வண்ணங்களில் ஒவியம் வரைந்து கிராமவாசிகள், விலங்குகளை விரட்டி அடித்தனர். தற்போது அது ஒரு வகைக் கலையாக மாறியுள்ளது.

செங்டுவின் உணவகைகள்

செங்டு நகரத்தில் பல சுவையான சிச்சுவான் உணவுகளை ருசிப்பார்க்கலாம். சிச்சுவான் உணவு, சீனாவின் 4 மிக முக்கிய உணவு வகைகளில் ஒன்றாக்க் கருதப்படுகிறது. அது, சீன உணவு வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கிறது. காரமான உணவுக்கு பெயர் போனது சிச்சுவான். சீன பல்வேறு இடங்களின் சமையல் முறை சிறப்புகளை ஒன்றிணைத்துள்ளது.

காரத்தைத் தவிர, இனிப்பு, உப்பு, புளிப்பு, கசப்பு முதலிய சுவைகளும் சிச்சுவான் உணவகளைகளில் கலந்து உள்ளன.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040