• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
துன்ஹுவாங்
  2016-06-17 18:53:52  cri எழுத்தின் அளவு:  A A A   

பண்டை காலத்தில், சீ யூ என அழைக்கப்பட்ட சீனாவுக்கு மேற்கிலுள்ள பகுதி, மத்திய ஆசியா, ஐரோப்பா ஆகியவற்றுக்குச் செல்லும் மிக முக்கியமான ஊட்டுவழியான பட்டுப்பாதையில் கான்சூ மாநிலத்தின் துன்ஹுவாங் நகரம் அமைந்துள்ளது. இந்நகரத்தில் விறுவிறுப்பான வர்த்தக நிகழ்வுகள் காணப்பட்டன. துன்ஹுவாங் கல் குகை, துன்ஹுவாங் சுவர் ஓவியம் ஆகியவற்றுக்கு உலகளவில் புகழ்பெற்ற துன்ஹுவாங் நகரமாகும்.

இந்நகர், உலக மரபுச்செல்வமான மொகாவ் குகை, ஹான் வம்ச பெருஞ்சுவரின் யுமென் நுழைவாயில், யாங்குவான் நுழைவாயில் ஆகியவை அமைந்துள்ள இடமாகும். 2012ஆம் ஆண்டு தனிச்சிறப்புமிக்க 200 சீன நகரங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்நகரம், தேசிய நிலை வரலாற்று மற்றும் பண்பாட்டுச் சிறப்பு வாய்ந்த நகரமாகத் திகழ்கிறது.

துன்ஹுவாங் சுவர் ஓவியம்

துன்ஹுவாங் சுவர் ஓவியம், துன்ஹுவாங் கலையின் முக்கிய பகுதியாகும். பிரமாண்டமான அளவில் வரையப்பட்ட இந்த சுவர் ஓவியம் தலைசிறந்த வேலைப்பாடுகளைக் கொண்டன. வண்ணமிகு துன்ஹுவாங் சுவர் ஓவியத்தின் அம்சங்கள் அழகாக உள்ளன. இதர மதத்துடன் தொடர்புடைய கலையைப் போல் அது கடவுளின் தோற்றம், செயல், கடவுள்களுக்கிடையேயான உறவு, கடவுளுக்கும் மனிதருக்கும் இடையேயான தொடர்பு ஆகியவற்றை வர்ணித்து, பொது மக்களின் அன்பான விருப்பங்களை வெளிப்படுத்துகிறது. மக்களுக்கு மனநிம்மதியைத் தரக்கூடிய கலை வடிவம் அதுவாகும். சுவரிலுள்ள அருங்காட்சியகம் எனப் போற்றப்படும் துன்ஹுவாங் சுவர் ஓவியம், உலகப் பண்பாட்டு மரபுச்செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040