• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
துன்சி பகுதியில் பயணக் குறிப்புகள்
  2016-06-17 19:39:51  cri எழுத்தின் அளவு:  A A A   
வணக்கம். அன்பான நேயர்களே, ஆன்ஹுய் மாநிலத்தைச் சேர்ந்த ஹுவாங்ஷான் நகரின் துன்சிப் பிரதேசம் பற்றிய பயன்மிக்க தகவல்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறோம். அறிவிப்பாளர் தமிழன்பன்.

துன்சி, ஆன்ஹுய் மாநிலத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது. ஆன்குவெய், செச்சியாங், சியாங் சி ஆகிய மூன்று மாநிலங்களை இணைக்கும் பிரதேசத்தில் இது அமைந்துள்ளது. துன்சி பிரதேசத்தின் மொத்த நிலப்பரப்பு 249 சதுர கிலோமீட்டர் ஆகும். இதன் மக்கள் தொகை சுமார் ஒரு லட்சத்து 56 ஆயிரமாகும்.

துன்சிப் பிரதேசம், நீண்டக்கால வரலாறுடையது. துன்சியின் புறநகரில், கி. மு. 10வது நூற்றாண்டு பழைய கல்லறை தொல் பொருட்கள் கண்டறியப்பட்டன.

சீன வரலாற்றில், தங்கு தடையற்ற நீர் வழி போக்குவரதது மேம்பாட்டுடன், ஆன்குவெயின் தென்பகுதியில் சரக்குப்பொருட்களின் வினியோக இடமாகவும், பொருளாதார மையமாகவும் துன்சி திகழ்கிறது. மிங் வம்சப் பேரரசர் சியா ஜிங் ஆட்சி புரிந்த 27வது ஆண்டு அதாவது 1548ஆம் ஆண்டு, துன்சி, சீனாவின் புகழ் பெற்ற தேயிலை சந்தைகளில் ஒன்றாக மாறியிருந்தது.

துன்சி பிரதேசத்தின் காலநிலை மிதமானதாய் இருக்கிறது. இங்கு நான்கு பருவங்களும் நிலவுகின்றன. மழை அதிகம். இதன் ஆண்டு சராசரி தட்பவெப்ப நிலை 16.3 திகிரி செல்சியஸ் ஆகும்.

துன்சி பிரதேசத்தில், ஹான் இனத்தவர்கள் குழுமி வாழ்கின்றனர். தவிரவும், சிறுபான்மை தேசிய இனத்தவர்களும் ஆங்காங்கு வாழ்கின்றனர். ஹுய், து ஜியா, மஞ்சு, யீ, சுவாங், லீ, துங், திபெத், சே, மியெள, கொரியா, பு யீ, மங்கோலியா உள்ளிட்ட 29 சிறுபான்மை தேசிய இனத்தவர்கள் துன்சியில் வாழ்கின்றனர். அவர்களின் மொத்த எண்ணிக்கை 927ஆகும். இதில், ஹுய் இன மக்களின் எண்ணிக்கை 48.8 விழுக்காடு வகிக்கின்றது.

நீங்கள் துன்சியில் பயணம் மேற்கொள்ள விரும்புகின்றீர்களா? ஷுவாங்ஷான் நகரின் விமான நிலையம் அல்லது தொடர்பு வண்டி நிலையத்திலிருந்து புறப்பட்டு, துன்சியை அடையலாம்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040