• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியில் முக்கிய இடம் வகிக்கும் புத்தாக்கம்
  2017-03-14 15:36:18  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் தலைமை அமைச்சர் லீ கேச்சியாங் இவ்வாண்டு வழங்கிய அரசுப் பணியறிக்கையில், புத்தாக்கம் மூலம் உற்பத்தி ஆற்றலின் மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சி முறை மாற்றத்தை முன்னேற்றும் முக்கியத்துவம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடைமுறையில், புதிய காலத்தில் புதிய தொழில் நுட்பத்தின் பயன்பாடானது தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி பெறுவதற்கான திறவுகோலாகும்.
2017ஆம் ஆண்டு ஜனவரியில், உலகில் முதலாவது இரட்டை நிற 4 கே லேசர் தொலைக்காட்சி பெட்டியை சீனாவின் ஹைசன்ஸ் குழு வெளியிட்டது. நிறங்களின் வகை, ஒளிச் செறிவு ஆற்றல் ஆகிய இரு முக்கிய குறியீட்டு துறைகளில் இது பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. அதன் படிம தரம் தரமான எல்சிடி தொலைக்காட்சியை விட சிறப்பானது. தொலைக்காட்சிப் பெட்டியின் தயாரிப்பு புதிய கட்டத்தில் நுழைந்துள்ளதை இது காட்டுகின்றது. ஹைசன்ஸ் குழுவின் தலைமை இயக்குநர் ட்சோ ஹோவ் சியன் கூறியதாவது
புத்தாக்கம் என்பது ஹைசன்ஸ் நிறுவனத்தின் மைய அம்சமாகும். தொழில் நுட்பம் மூலம் நிறுவனத்தை வளர்த்து, நிதானமாகவும் சீராகவும் அலுவல்களை மேற்கொள்வதில் ஊன்றி நிற்கின்றோம். லாபம் பெறுவது தொழில் நிறுவனத்தின் இறுதி இலக்காகும். அதற்காக நுகர்வோரின் தேவைகளை சிறப்பாக நிறைவேற்ற வேண்டும். வளர்ச்சி மற்றும் ஆய்வில் சிறப்பாக ஈடுபட்டால் தான், தரமான உற்பத்தி பொருட்களைத் தயாரிக்க முடியும் என்று அவர் கூறினார்.
தற்போது, படங்கள் மற்றும் மாபெரும் தரவுகளைக் கையாள்வதை மையத் தொழில் நுட்பமாகக் கொண்டு, நுண்ணறிவு போக்குவரத்து, ஒளியிழை தொலைத் தொடர்பு, மின்னணு மருத்துவ சிகிச்சை முதலிய துறைகளில் ஹைன்சஸ் குழு அதிக முன்னேற்றங்களைப் பெற்றுள்ளது.
2016ஆம் ஆண்டு உலகில் வீட்டு பயன்பாட்டுக்கான பெரிய ரக மின்சாரக் கருவிகளின் சில்லறை விற்பனை பற்றி ஓரேய் எனும் புகழ்பெற்ற பன்னாட்டுப் புலனாய்வு நிறுவனம் இவ்வாண்டின் ஜனவரி 10ஆம் நாள் வெளியிட்டது. அதன்படி, சீனாவின் ஹைல் வீட்டு பயன்பாட்டு மின்சாரக் கருவிகளின் சில்லறை விற்பனை தொகை முழு உலக சந்தையின் 10.3 விழுக்காடு என்ற பங்குடன் முதலிடம் வகிக்கின்றது. 2016ஆம் ஆண்டு, அழுத்தி இல்லாத cellarette, மிக குறைவான நீர் தேவைப்படும் சலவை இயந்திரம், சத்தம் மிககுறைவான காற்று பதனாக்கி முதலிய புதிய வீட்டுப் பயன்பாட்டுக் கருவிகளை ஹைல் நிறுவனம் வெளியிட்டது. பிற நிறுவனங்களை விட 2 இல்லது 3 ஆண்டுகளுக்கு முன்பே ஹைல் நிறுவனம் புதி தொழில் நிடுபத்தைப் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
புத்தாக்கத்தைச் சிறப்பாக நடைமுறைப்படுத்தினால் தான், உலகத்துடன் முன்னேற முடியும் என்று ஹைல் குழுவின் தலைமை இயக்குநர் ட்சோ யுன்ச்சியே கருத்து தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040