• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-அமெரிக்க அரசுத் தலைவர்களின் சந்திப்பு
  2017-03-31 14:20:58  cri எழுத்தின் அளவு:  A A A   

அமெரிக்க அரசுத் தலைவர் டோனால்ட் ட்ராம்பின் அழைப்பை ஏற்று, சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின் பிங், ஏப்ரல் 6, 7 ஆகிய நாட்களில், அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் அமெரிக்க அரசுத் தலைவர் ட்ரம்பைச் சந்திப்பார் என்று சீன வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் லூ காங் 30ஆம் நாள் தெரிவித்தார். இவ்வாண்டு ஜனவரி திங்களில், ட்ரம்ப் அரசுத் தலைவராக பதவி ஏற்ற பிறகு நடைபெறும், இரு நாட்டு அரசுத் தலைவர்களின் முதல் சந்திப்பு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இரு நாட்டு அரசுத் தலைவர்களின் சந்திப்பு குறித்தும் இரு நாட்டுறவின் எதிர்காலம் குறித்தும் பலரும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

வெள்ளை மாளிகையில் ட்ராம்ப் பதவியேற்ற 2 திங்கள் காலங்களில், இரு நாடுகளின் உறவு பல சர்ச்சைகளில் சிக்கி கொண்டது. இதனால், இச்சந்திப்பின் வேகம், எதிர்பார்ப்பைத் தாண்டியுள்ளது. இரு அரசுத் தலைவர்களின் சந்திப்பின் வேகம் 2013ஆம் ஆண்டு ஷீ ச்சின் பிங்—ஓபாமா சந்திப்பைத் தாண்டியது. இரு தரப்பினர்கள் எட்டியுள்ள பொதுக் கருத்துகள் இச்சந்திப்பு வேகத்திற்கான காரணமாகும். சீனாவின் முக்கிய நலன் கார்ந்த பிரச்சினைகளுக்கு அமெரிக்கா மதிப்பு அளித்து, கவனம் செலுத்தியது.

இச்சந்திப்பின் தடைகளை நீக்கியுள்ளது என்று சீன சர்வதேச பிரச்சினை ஆய்வுக் கழகத்தின் தலைவர் சூ கே தெரிவித்தார்.
இரு நாட்டு தூதாண்மையுறவு உருவாகிய 38 ஆண்டுகளில், அரசுத் தலைவர் சந்திப்பு, இரு நாட்டுறவில் முக்கியப் பங்காற்றி வருகின்றது. மாவ் சே துங்-நிக்சன் சந்திப்பு, தங் சியாவ் பிங்கின் அமெரிக்க பயணம் முதலியவை இரு நாட்டுறவைக் கொண்டு செலுத்தியது போன்று, ஷீ ச்சின் பிங், ட்ரம்ப் இருவரின் இச்சந்திப்பு, இரு நாட்டுறவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று சு கே சுட்டிக்காட்டினார்.

பொருளாதார வர்த்தக உறவு, இரு நாட்டுறவின் முக்கிய அம்சமாகும். 2016ஆம் ஆண்டில், இரு நாட்டு வர்த்தக தொகை 50 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியது. இரு நாட்டு வர்த்தகம் பற்றி, ட்ரம்பின் கருத்துக்களால், நிறைய கவலை ஏற்பட்டது. இதனால், சீன-அமெரிக்க வர்த்தக போர் தவிர்க்க முடியாத ஒன்று என்ற வெளிப்புறக் கருத்து வருவானது. ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் ஒத்துழைப்பு, இரு நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு துணை புரியும். பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பை ஆழமாக்கி வலுப்படுத்துவது, புதிய காலத்திலுள்ள சர்ச்சைகளைத் தீர்க்கும் வழிமுறையாகும் என்று சூ கே தெரிவித்தார்.

தவிரவும், கொரிய தீபகற்ப அணு ஆயுத பிரச்சினை உள்ளிட்ட பிரதேச மற்றும் சர்வதேச பிரச்சினைகளில், இச்சந்திப்பு கவனம் செலுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

(கலைமணி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040