சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங் 8-ஆம் நாள் அஸ்தானாவில் ஆப்கானிஸ்தான் அரசுத் தலைவர் அஷ்ரப் கானியைச் சந்தித்துரையாடினார்.
சீனாவுடனான நட்புறவை ஆப்கானிஸ்தான் பேணி மதித்து, சர்வதேச மற்றும் பிரதேச விவகாரங்களில் சீனாவின் முக்கிய பங்குகளில் கவனம் செலுத்தி வருகின்றது என்று கானி தெரிவித்தார். மேலும், பொருளாதாரம், வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் சீனாவுடனான ஒத்துழைப்புகளை வலுப்படுத்த பாடுபடுவதோடு, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவை ஆப்கானிஸ்தான் உயர்வாக பாராட்டுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.(தேன்மொழி)