• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசிய பொருளாதார வளர்ச்சி பற்றிய மதிப்பீடு
  2017-07-20 15:48:10  cri எழுத்தின் அளவு:  A A A   
2017ஆம் ஆண்டு ஆசிய வளர்ச்சி பற்றிய கண்ணோட்டம் எனும் அறிக்கையின் இணைப்பு பகுதியை ஆசிய வளர்ச்சி வங்கி 20ஆம் நாள் வெளியிட்டது. இதில் இவ்வாண்டு ஆசிய பொருளாதார அதிகரிப்புக்கான மதிப்பீடு முன்தைய 5.7 விழுக்காட்டிலிருந்து 5.9 விழுக்காட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டின் பொருளாதார அதிகரிப்புக்கான மதிப்பீடும் 5.7 விழுக்காட்டிலிருந்து 5.8 விழுக்காடாக உயர்த்தப்பட்டது.
ஆசிய பசிபிக் பிரதேசத்தில் தெற்காசியா மிக விரைவாக வளரும் பிரதேசமாகும் என்று இவ்வறிக்கையில் கூறப்பட்டது. இவ்வாண்டு மற்றும் அடுத்த ஆண்டில் தெற்காசியாவின் பொருளாதார வளர்ச்சி முறையே 7.0 விழுக்காடாகவும், 7.2 விழுக்காடாகவும் இருக்கும். இக்காலத்தில் வலுவான உள்நாட்டு தேவையினால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.4 மற்றும் 7.6 விழுக்காடு அடையும் என்று இதில் மதிப்பிடப்பட்டது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040