• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசிய நிதித் துறை ஒத்துழைப்பு
  2017-07-25 10:29:43  cri எழுத்தின் அளவு:  A A A   
ஆசிய நிதி ஒத்துழைப்புச் சங்கத்தின் துவக்க விழா 24ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. தற்போது வரை 27 நாடுகளைச் சேர்ந்த 107 நிதி நிறுவனங்கள் இச்சங்கத்தில் சேர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சீன அரசவை துணை தலைமை அமைச்சர் மா காய் துவக்க விழாவில் கலந்து கொண்டு கூறுகையில், ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கிக்கு அடுத்து, சீனாவின் முன்மொழிவின்படி நிறுவப்பட்ட ஆசிய நிதி ஒத்துழைப்புச் சங்கமும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிவித்தார்.
இச்சங்கத்தின் செயற்குழுத் தலைவரும் சீன வங்கியின் தலைமை இயக்குநருமான தியன் காவ்லீ கூறியதாவது
ஆசிய பிரதேசத்தில் பெருமளவிலான நிதி நெருக்கடி பல முறை நிகழ்ந்துள்ளது. இத்தகைய கடும் நிதி நெருக்கடி நிகழ்ந்த போது, இதனை சமாளிக்கும் ஆற்றலும், இதன் பாதிப்பைத் தணிவுப்படுத்தம் ஆற்றலும் ஆசியாவுக்கு உள்ளதா என்ற சந்தேகம் எழும்பியுள்ளது. இந்நிலைமையில், ஆசியாவில் ஒரு ஒத்துழைப்பு அமைப்பை நிறுவ வேண்டும் என்று ஆசியாவிலுள்ள நிதி நிறுவனங்களும் வங்கியர்களும் விரும்புகின்றனர் என்றார் அவர்.
தற்போது, ஆசியா உலகப் பொருளாதார அதிகரிப்புக்கான முக்கிய உந்து விசையாக மாறியுள்ளது. அதேவேளையில், பல அறைக்கூவல்களை இது எதிர்நோக்குகின்றது. ஆசியாவிலுள்ள நாடுகளில் பெரும்பாலானவை வளரும் நாடுகளாகும். அவற்றின் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கு அதிக நிதி தேவைப்படுகின்றது. தொடரவல்ல வளர்ச்சிக்கான தேவையும் அதிகம். அடுத்த 8 முதல் 10 ஆண்டுகளில், ஆசியாவில் அடிப்படை வசதிகளின் கட்டுமானத்துக்கு ஆண்டுக்கு 73 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் தேவை. ஆனால், உலகில் மிகப் பெரிய பன்னாட்டு நிதி நிறுவனங்களான ஆசிய வளர்ச்சி வங்கியும் உலக வங்கியும் ஓராண்டில் ஆசியாவின் இத்துறையில் மொத்தம் 3 ஆயிரம் அமெரிக்க டாலர் மட்டும் முதலீடு செய்ய முடியும்.
இந்தப் பின்னணியில் ஆசிய நிதி ஒத்துழைப்புச் சங்கம் என்பது ஆசிய நாடுகளுக்கிடையில் நிறுவப்பட்ட அரசு சாராத, லாப நோக்கமற்ற சமூக அமைப்பாகும்.
ஆசியாவில் ஆசிய நிதி ஒத்துழைப்புச் சங்கம் உள்ளிட்ட வலுவான நிதி அமைப்புகளுடன் ஒத்துழைத்து, நிதியின் புழக்கத்தையும் பயனையும் அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளும் என்று ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியின் தலைவர் ஜின் லீச்சுன் தெரிவித்தார். மேலும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவுகளில் சேர்ந்துள்ள பல நாடுகளின் நிதி நிறுவனங்கள் ஆசிய நிதி ஒத்துழைப்புச் சங்கத்தில் சேர்ந்துள்ளதால், இந்தச் சங்கம் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை தொடர்பான நாடுகளுக்கும் நிதித் துறை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு மேடையாகவும் செயல்படும்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040