• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் முதலாவது தேசிய இன கலைக் களஞ்சியம்
  2017-08-04 15:45:34  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவில் முதலாவது தேசிய இன கலைக் களஞ்சியம், 18 ஆண்டுகால தொடர் முயற்சியின் விளைவாக, தற்போது, சீன வெளியீட்டக குழுமத்தின் உலக நூல் வெளியீட்டு நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. சீனத் தேசிய இன இயல் ஆய்வுக்கான தொகுப்புச் சாதனைகள், சீனாவின் 56 தேசிய இனங்களின் அடிப்படை நிலைமை முதலியவை தொடர்பான கருவி நூல் இதுவாகும். சீனத் தேசிய இன இயல் பற்றிய ஆய்வுக்கு இக்களஞ்சியம் அடிப்படை தன்மை பங்காற்றும். இக்களஞ்சியத்தில் மொத்தமாக 15 தொகுதிகள் உள்ளன. இதில் ஏறக்குறைய 2 கோடியே 50 இலட்சம் எழுத்துக்கள் இருக்கின்றன. சீனாவின் 56 தேசிய இனங்களின் வரலாறு, அரசியல், இராணுவம், சமூகப் பொருளாதாரம், மத நம்பிக்கை, பழக்கவழக்கம் முதலியவை இதில் இடம்பெற்றுள்ளன.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040