• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தின் முன்னேற்றம்
  2017-08-18 16:05:00  cri எழுத்தின் அளவு:  A A A   

ஒன்றுக்கொன்று தொடர்பு, உற்பத்தி திறன் ஒத்துழைப்பு, வர்த்தக முதலீடு, வெளிநாட்டுத் தொழில் மண்டல கட்டுமானம் ஆகிய துறைகளில் சீனாவுக்கும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையில் உள்ள நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு தொடர்ந்து முன்னேறி வருகின்றது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம் ஒழுங்காகவும், பயனுள்ள முறையிலும் நடைபெற்று வருகின்றது. சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம்17ஆம் நாள் வெளியிட்ட கட்டுரையில் இதைச் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாண்டின் முற்பாதியில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையில் உள்ள 47 நாடுகளில் சீனத் தொழில் நிறுவனங்கள் 661 கோடி அமெரிக்க டாலரை முதலீடு செய்துள்ளன. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 6 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டின் இறுதி வரை, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையில் உள்ள 20 நாடுகளில், 56 பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு மண்டலங்களை சீனத் தொழில் நிறுவனங்கள் கட்டியமைத்துள்ளன. இதற்கான மொத்த முதலீட்டுத் தொகை, 1850 கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது என்றும் இக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (மீனா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040