• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
குன்மிங்கில் புத்தாக்கம் பற்றிய பரிமாற்றம்
  2017-08-20 15:33:06  cri எழுத்தின் அளவு:  A A A   
பிரிக்ஸ் நாடுகளின் புதுமை படைத்தவர் போட்டி 19ஆம் நாள் சீனாவின் குன்மிங் அறிவியல் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தில் துவங்கியது. சீனா, ரஷியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளின் புதுமை படைத்தவர்கள் ஒன்றுகூடி, போட்டியின் மூலம் புத்தாக்கச் சிந்தனை பற்றி பரிமாற்றம் செய்து நட்புறவை வலுப்படுத்தியுள்ளனர்.

இந்தப் போட்டி, பிரிக்ஸ் நாடுகளின் தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும் தொழில் புத்தாக்கப் போட்டிகளில் ஒன்றாகும். பொறியியல் திறமைசாலிக்கான பயிற்சி, அறிவியல் ஆய்வு, பண்பாட்டுப் பரிமாற்றம் உள்ளிட்ட துறைகளில் பிரிக்ஸ் நாடுகளும் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள நாடுகள் மற்றும் பிரதேசங்களும் ஒத்துழைப்பு மேற்கொள்ள இந்தப் போட்டி துணைபுரியும் என்று கருதப்படுகிறது.(வான்மதி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040