பாடம் 1 சந்திப்பு

 CRIயுடன் பேசுக
 
  • வணக்கம். சீன மொழியில் பொதுவாக வணக்கம் தெரிவிக்கும் போது, 你好 Nǐ hǎo என்று கூறுகின்றனர். எந்த நேரத்திலும் இடத்திலும் இச்சொல்லைக் கூறி வணக்கம் தெரிவிக்கலாம். இதற்குப் பதிலளிக்கவும் 你好 Nǐ hǎo என்று கூறலாம். 你 Nǐ என்பதற்குத் தமிழில் நீ என்று பொருள்.
  • உங்கள் பெயர் என்ன? ஒருவரது பெயரை அறிய விரும்பினால், அவரிடம் 你叫什么名字 Nǐ jiào shénme mínɡzi என்று கேளுங்கள். 你 Nǐ என்றால் என்ன என்று பொருள். 名字 mínɡzi என்றால் தமிழில் பெயர் என்று பொருள்.你叫什么名字 Nǐ jiào shénme mínɡzi?உங்கள் பெயர் என்ன? பெயர் கேட்கபட்டவுடன், "我叫 wǒ jiào பெயர்" என்று கூறலாம்.
  • இது என் பெயர் அட்டை. பொதுவாக ஒருவரை சந்திக்கும் போது முதலில் வணக்கம் சொல்லி அவரது பெயரை கேட்பது வழக்கம். பிறகு பெயர் அட்டையை பரிமாறிக் கொள்வது வழக்கம். உங்கள் பெயரட்டையை தரும் போது 这是我的名片 Zhè shì wǒ de mínɡpiàn என்று கூறுங்கள். 这 Zhè என்பதற்கு இது என்று பொருள். 我的 wǒ de என்பதற்கு எனது என்று பொருள். 名片 mínɡpiàn என்றால் பெயர் அட்டை என்று பொருள். 这是我的名片 Zhè shì wǒ de mínɡpiàn. இது என் பெயர் அட்டை.
  • சந்தித்து நீண்ட நாட்களாகிவிட்டது. நீண்டகாலம் சந்திக்காத நண்பரை பார்க்கும்போது 好久不见 Hǎo jiǔ bú jiàn. என்று சொல்லலாம். 好久 Hǎo jiǔ என்பதற்கு நீண்டகாலம் என்று பொருள். 不见 bú jiàn என்பதற்கு சந்திக்கவில்லை என்று பொருள். 好久不见 Hǎo jiǔ bú jiàn. சந்தித்து நீண்ட நாட்களாகிவிட்டது.