குவெய் இசை நாடகம், சீனாவின் மிக பழமை வாய்ந்த இசை நாடகங்களில் ஒன்றாகும். பீக்கிங் இசை நாடகம் குவெய் இசை நாடகத்திலிருந்து தோன்றியது என்பது குறிப்பிடத்தக்கது. 1790ஆம் ஆண்டு, நான்கு பெரிய குவெய் இசை நாடகக் குழுக்கள் பெய்சிங்கிற்கு வந்தன. அதற்கு பின், ஜிங் ச்சியாங் என்னும் பெய்சிங் இசை பாணி, ச்சின் ச்சியாங் என்னும் ஷென் சி இசை நாடகம், குன்ச்சு இசை நாடகம், ஹான் தியாவ் என்னும் ஹூபெய் இசை நாடகம் ஆகியவற்றின் மேம்பாடுகளை சேர்த்து, பீக்கிங் இசை நாடகம் படிப்படியாக உருவாகியது. குவெய் இசை நாடகத்துக்கும், பீக்கிங் இசை நாடகத்துக்குமிடை உறவு, இந்த இசை நாடக விழாவில் முக்கியமாக வெளிப்படுத்தப்பட்டது.



