குவெய் இசை நாடக ஆய்வகத்தின் தலைவரும், குவெய் இசை நாடக வாரிசுயுமான லீ லுங் பின், இந்த இசை நாடக விழாவின் இயக்குநர்களில் ஒருவர் ஆவார். ஒத்திகையில், கலைஞர்கள் இணக்கமாக ஒத்துழைப்பு மேற்கொண்டனர். குவெய் இசை நாடகம் மீதான மதிப்புணர்வைக் கொண்டு, ஷாங் ச்சாங் ரோங் உள்ளிட்ட அதிகமான பீக்கிங் இசை நாடகக் கலைஞர்கள் தூக்கத்தை மறந்து, இசை நாடக வரிகளை மனப்பாடம் செய்து, பீக்கிங் இசை நாடகத்துக்கும் குவெய் இசை நாடகத்துக்குமிடையிலான ஒற்றுமையையும் வேற்றுமையையும் ஆழமாக ஆராய்ந்து அறிந்தனர்.



