• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மனித மூளைகளுக்கு இடையே தகவல் பரிமாற்றம் – பகுதி I
  2013-09-16 15:35:18  cri எழுத்தின் அளவு:  A A A   

அவ்வாறு மூளைகளுக்கு இடையே நடந்த தகவல் பரிமாற்றத்தால் ஒருவரின் மூளை செயல்பட நினைத்ததை தகவலாக இன்னொருவரின் மூளை பெற்றுக்கொண்டு, அந்த தகவலை வாசித்து, புரிந்துக் கொண்டு செயல்பாட்டை நிறைவேற்றியுள்ளது. அமெரிக்க வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜேஷ் ராவும் அவருடன் பணியாற்றும் ஆன்டிரியா ஸ்டோகோவும் (Andrea Stocco) தான் இந்த ஆய்வை மேற்கொண்டு, இரு மனித மூளைகளுக்கிடை தகவல் பரிமாற்றம் செய்துகொண்ட முதல்வர்களாக மாறியுள்ளனர். இந்த ஆய்வில் ராஜேஷ் ராவ் எண்ணிய செயல் ஆண்டிரியா ஸ்டோகோவின் மூளைக்கு தகவலாக அனுப்பப்பட்டு, ஸ்டோகோவின் வலது கைவிரலை செயல்பட தூண்டியுள்ளது. இந்த ஆய்வை மேற்கொள்ள இருவரும் அறநெறி மீளாய்வு வாரியத்தின் சிறப்பு அனுமதி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் இரு எலிகளின் மூளைகளுக்கிடை தகவல் பரிமாற்றத்தை டியுக் (Duke) பல்கலைக்கழகம் நிறைவேற்றியுள்ளது. மனிதரின் மூளைக்கும், எலியின் மூளைக்கும் இடையே தகவல் தொடர்பை ஹார்வார்டு பல்கலைக்கழகம் உறுதிச் செய்துள்ளது. இரு மனிதரின் மூளைகளுக்கிடை தகவல் பரிமாற்றத்தை உருவாக்கியிருப்பது இதுவே முதல்முறை என்று ராஜேஷ் ராவும், ஆன்டிரியா ஸ்டோகோவும் நம்புகின்றனர். இணைய வசதியை மனித மூளைகளுக்கிடை தொடர்பையும், தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ள உதவும் கருவியாகவும் பயன்படுத்தலாம் என்பதை இந்த ஆய்வுச் சுட்டிக்காட்டுகிறது.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040