• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மனித மூளைகளுக்கு இடையே தகவல் பரிமாற்றம் – பகுதி I
  2013-09-16 15:35:18  cri எழுத்தின் அளவு:  A A A   

சரி! இரு மனிதரின் மூளைகளுக்கிடையே தகவல் பரிமாற்றத்தை இந்த ஆய்வாளர்கள் எவ்வாறு நிறைவேற்றினார்கள் என்பதை பார்ப்போமா? மின் செயல்பாடுகளை வரையும் கருவியோடு இணைக்கப்பட்ட மின் தொப்பி அணிந்து ராஜேஷ் ராவ் ஆய்வகத்தில் அமர்ந்திருந்தார். அவரது மூளையில் ஏற்படும் செயல்பாடுகள், மாற்றங்கள் அனைத்தும் இந்த கருவியில் பதிவாகும்.

ஆன்டிரியா ஸ்டோகோ அதே வளாகத்தில், ஆனால் வேறொரு இடத்தில் இருந்த அவருடைய ஆய்வகத்தில் ஊதா வண்ண தொப்பியை அணிந்து அமர்ந்திருந்தார். அந்த தொப்பியில் மண்டையோட்டை ஊடுருவிச் செல்லும் காந்த அலையால் தூண்டுதல் அளிக்கும் கம்பிச்சுருள் வைக்கப்பட்டிருந்தது. இந்த கம்பிச்சுருள், கையின் செயல்பாட்டை கட்டுப்படுத்துகிற மூளையின் இடதுப்பக்கப் பகுதியான மோட்டார் கோர்டெஸ் எனப்படும் இயக்கப் புறணிக்கு (motor cortex) நேர் மேலே தலையில் வைக்கப்பட்டிருந்தது.

இருவரின் ஆய்வகமும் ஸ்கைப் இணைப்பில் தொடர்பிலிருந்தாலும், ராஜேஷ் ராவும், ஆன்டிரியா ஸ்டோகோவும் அந்த ஸ்கைப் திரையை பார்க்காத விதத்தில் அமர்ந்திருந்தனர்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040