வயது முதிர்ந்த ஆணும் பெண்ணும் ஆற்றோரத்தில் மீன்பிடித்து வீடு கட்டி, அயராது உழைப்பதை பண்டைக்கால Xibo இனத்தின் ஒரு நாட்டுப்புறப்பாடல் வர்ணிக்கின்றது. Qi Che Shan என்பவர் இவ்வினத்தின் அறிஞர் ஆவார். இப்பாடலைப் பாடுகின்றார். அவரது முன்னோடிகள், வடக்கிழக்கு சீனாவில் வாழ்ந்திருந்தனர். சொகுசான மீன்பிடிப்பில் வாழ்க்கை நடத்தினர். இருப்பினும், தற்போது, அவரது குடும்பம் வட மேற்கு சீனாவின் சிங்கியாங் விகுர் தன்னாட்சிப் பிரதேசத்தில் வாழ்கின்றது. அவர்களுடன் வசிக்கும் Xibo இனத்தவரின் எண்ணிக்கை, சுமார் 40 ஆயிரமாகும்.
இவ்வளவு அதிகமான Xibo இன மக்கள் சிங்கியாங்கில் வாழ்கின்றனர். காரணம் என்ன? இதோ ஒரு உண்மைக் கதை.
240 ஆண்டுகளுக்கு முன்னர், சிங் வம்சகாலத்தில், எல்லைக் காவலை வலுப்படுத்துவதற்காக, அரசு, வட கிழக்கிலிருந்து மூவாயிரத்துக்கும் அதிகமான Xibo இன படையினரையும் மக்களையும் வடமேற்கு சிங்கியாங்கில் குடியமர்த்தியது. 17 திங்கள்கால கடின பயணத்துக்குப் பின், அவர்கள் சிங்கியாங்கிற்கு வந்து இ லி ஆற்றின் தெற்கு கரையில் குடியேறினர்.
நீர் பற்றாக்குறையினால், அவர்கள் 6 ஆண்டுகளில் 200 கிலோமீட்டருக்கு அதிகமான நீளமுடைய பெரிய கால்வாய் ஒன்றை தோண்டி, இ லி ஆற்று நீரைக் கொண்டு, தரிசு நிலத்தை வயலாக்கப் பயன்படுத்தினர். பல தலைமுறைகளுக்கு நன்மை பயக்கும் இப்பெரிய கால்வாய்க்கு, "Chabuchaer" அதாவது, Xibo இன மொழியில் தானியக் களஞ்சியம் என்ற பெயர் வழங்கப்பட்டது. இதற்குப் பின் அயரா உழைத்து வரும் Xibo இன மக்கள், இ லி ஆற்றோரத்தில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து புதிய ஊரகத்தை நிர்மாணித்து வருகின்றனர்.
1 2 3
|