வசந்த விழா, சீனாவின் மிக முக்கிய விழாவாகும். சீனர்களுக்கான வசந்த விழாவில் நிறைய அர்த்தம் உள்ளது. கடந்த ஆண்டுக்கு வணக்கம் சொல்வது, புதிய ஆண்டை வரவேற்பது, குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடுவது ஆகியவை வசந்த விழாவின் முக்கிய அம்சங்களாகும். வசந்த விழா காலத்தில் சீனர்கள், முழு ஆண்டிலும் சேமித்த பணத்தை அதிகமாக செலவிடுவர். நிறைய கொண்டாட்ட பொருட்களை வாங்குவர். கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக குழந்தைகளுக்கு பரிசுப்பணம் அளிக்க வேண்டும். இளைய தலைமுறை, முதியோரை வணங்கிட வேண்டும்.