• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-03-03 10:31:52    
பூப்பந்து

cri
2004 ஆம் ஆண்டு தாமஸ் கோப்பை மற்றும் யூபர் கோப்பைக்கான ஐரோப்பிய பிரதேசப் போட்டி, பிப்ரவரி 15 ஆம் நாள் ஸ்லோவாக்கில் நிறைவுற்றது. தாமஸ் கோப்பைக்கான போட்டியில், டென்மார்க் 3 : 0 என்ற ஆட்டக்கணக்கில், ஜெர்மனியைத் தோற்கடித்து முதலிடம் பெற்றுள்ளது. ஜெர்மனி 2 ஆம் இடம் பெற்றது. 3 : 1 என்ற ஆட்டக்கணக்கில், போலந்தைத் தோற்கடித்த இங்கிலாந்து 3 ஆம் இடம் பெற்றது. யூபர் கோப்பைக்கான போட்டியில், டென்மார்க் 3 : 2 என்ற ஆட்டக்கணக்கில், ஜெர்மனியைத் தோற்கடித்து முதலிடம் பெற்றது. ஜெர்மனி 2 ஆம் இடம் பெற்றது. நெதர்லாந்து, 3 : 0 என்ற ஆட்டக்கணக்கில், இங்கிலாந்தை வென்றது. இந்த தாமஸ் கோப்பை மற்றும் யூபர் கோப்பைக்கான ஐரோப்பிய பிரதேசத்தின் போட்டி, பிப்ரவரி 10 ஆம் நாள் ஸ்லோவாக்கியத்தில் துவங்கியது. 34 ஆடவர் அணிகளும், 31 மகளிர் அணிகளும், இதில் கலந்து கொண்டுள்ளன. ஆஸ்திரேலிய மண்டலத்துக்கான போட்டியில், முறையே, நியூசிலாந்து ஆடவர் அணியும், ஆஸ்திரேலிய மகளிர் அணியும், வெற்றி பெற்றுள்ளன.