• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-03-03 10:34:55    
டென்னிஸ்

cri
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்பர்னில் நடைபெற்றுவருகின்றது. 29 ஆம் நாள் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் அரை இறுதிப் போட்டியில், பெல்ஜியத்தின் ஹெனின், 6:2, 6:2 என்ற கணக்கில், கொலம்பியாவின் ஜூலுகாவை தோற்கடித்து, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். மற்றொரு அரையிறுதிப் போட்டியில், உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான பெல்ஜியத்தின் கிம் கிளைஸ்டர்ஸ் 6:2, 7:6 என்ற கணக்கில், சுவிட்சர்லாந்தின் சிக்னைடரை வென்று, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இறுதி ஆட்டத்தில், பெல்ஜிய வீராங்கனையரான ஹெனின், கிளைஸ்டர்ஸ் சனவரி 31 ஆம் நாள், மோத உள்ளனர். இருவரும், 2003 ஆம் ஆண்டில், பிரெஞ்சு ஓபன் மற்றும் யு.எஸ் ஓபன் இறுதிப் போட்டியில், விளையாடி உள்ளனர். இவை இரண்டிலும், ஹெனின் வெற்றி பெற்றார் என்பது, குறிப்பிடத்தக்கது.

ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில், புகழ்பெற்ற அமெரிக்க வீரர் அகசி, ரஷியாவின் சஃபினை எதிர்த்து விளையாடினார். சஃபின் 3:2 என்ற ஆட்டக்கணக்கில், 33 வயதான அகசியைத் தோற்கடித்து, இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். ஃபெடரர் ஃபெரெரோ இடையிலான மற்றோர் அரையிறுதி ஆட்டம், வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

ஜூனியர் ஒற்றையர் பிரிவு மூன்றாம் சுற்று ஆட்டத்தில், இந்திய வீரர் கரண் ரஸ்தோகி, சீன தைபெயின் சுயூஹான் யை எதிர்த்து விளையாடினார். இதில், ரஸ்தோகி 2:0 என்ற ஆட்டக்கணக்கில், வெற்றி பெற்று, காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

ஜூனியர் மகளிர் இரட்டையர் பிரிவில், சீனாவின் சுன் சென் நான்/சென் யூங் ரென் ஜோடி, 2:0 என்ற ஆட்டக்கணக்கில், கிரோஷிய ஜோடியைத் தோற்கடித்து, அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இரட்டையர் பிரிவின் இரண்டாம் சுற்றுப் போட்டியில், இந்திய வீரர் துஷர் லிபர்அன்/தாய்லாந்தின் வீராபட்டோக்மாய்க்லீ ஜோடி, 0:2 என்ற ஆட்டக்கணக்கில், அமெரிக்காவின் பிரன்டன் இவான்ஸ்/ஸ்கார்ட் ஓடேஸ்மாவிடம் தோல்வியடைந்தது.

மகளிர் இரட்டையர் பிரிவில், சீனாவின் சென் ஜியெய்/யென் சி ஜோடி தோல்வி கண்டுள்ளனர். சனவரி 27 ஆம் நாள் நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவின் கால் இறுதிப் போட்டியில், இவர்கள், 0:2 என்ற ஆட்டக்கணக்கில், ரஷியாவின் சினெய்சுவா/லிக்ஹுஃபுசெவா ஜோடியிடம் தோல்வி கண்டனர்.