• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-09-09 16:47:10    
விரைவாக வளர்ந்துள்ள சீன விளம்பரத் துறைகலையரசி

cri

கடந்த சில ஆண்டுகளில் சீனாவின் விளம்பரத் துறை வெகுவாக வளர்ச்சியடைந்துள்ளது. அதன் ஒட்டுமொத்த நிலைமை முன்கண்டிராத நிலையில் உயர்ந்துள்ளது. உலக வர்த்தக அமைப்பில் சேர்ந்த போது அளித்த வாக்குறுதியை சீனா நிறைவேற்றும். 2005ம் ஆண்டின் இறுதியில் விளம்பர சந்தையை முழுமையாக வெளிநாடுகளுக்குத் திறந்து வைக்கும். சீனாவின் விளம்பர பிரச்சார துறையின் சர்வதேச மயமாக்க நிலை மேலும் உயரும் என்று சீன அரசின் தொழில் மற்றும் வணிக நிர்வாக தலைமை ஆணையகத்தின் அதிகாரி ஒருவர் பெய்சிங்கில் 39வது உலக விளம்பரக் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார். சீனாவில் விளம்பரத் துறை புதிய வளர்ச்சியடைந்துள்ள துறையாகும். கடந்த 25 ஆண்டுகளாக சீனாவின் சீர்த்திருத்த மற்றும் திறப்பு பணி ஆழமாகியதுடன் மீட்சியடையும் துவக்கத்திலிருந்து அளவில் வளரும் காலகட்டத்தை இத்துறை பிடித்துள்ளது. இது பற்றி ஆணையகத்தின் துணைத் தலைவர் லியு வேன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் கூறியதாவது. சீனாவின் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டு திறப்புடனும், தேசிய பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சியுடனும் சிறியதிலிருந்து பெரிதாகவும், வெகுவாக வளரும் முன்னேற்றப் போக்கை விளம்பரத் துறை தாக்குப்பிடித்து ஒட்டுமொத்த நிலையுடன் உயர்ந்துள்ளது. 2003ல் சீன விளம்பரத் துறைக்கு கிடைத்த வருமானம் 10 ஆயிரம் கோடி யுன்னைத் தாண்டியது. சதீனப் பொருளாதார சமூகத்தில் முக்கிய செல்வாக்கு வாய்ந்த துறைகளில் ஒன்றாயிற்று என்றார் அவர். கடந்த 20 ஆண்டுகளாக வளர்ந்த பின், இத்துறையில் மாபெரும் திறமைசாலிகள் வளர்ந்துள்ளனர். தலைசிறந்த நிறுவனங்கள் உருவாயிற்று. குறிப்பிட்ட அளவில் கையிருப்பு சேமிக்கப்பட்டுள்ளது. பூர்வாங்கரீதியில் அளவும் நலனும் உடைய துறையாகியுள்ளது. தேசிய பொருளாதார மற்றும் சமூக வாழ்க்கையில் விளம்பரத் துறையின் நிலை மேன்மேலும் உயர்ந்துள்ளது. தேசியப் பொருளாதார வளர்ச்சியின் அறிக்குறியாக மாறியுள்ளது. உலக வர்த்தக அமைப்பில் சேர்ந்த போது அளித்த வாக்குறுதியின் படி இதில் சேர்ந்து 2 ஆண்டுகள் கழிந்த பின் அதாவது 2003ம் ஆண்டின் இறுதி முதல் அந்நிய முதலீட்டுரிமை கொண்ட பங்கு முதலீட்டு விளம்பர நிறுவனங்கள் நிறுவுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இது வரை உலகில் 10 புகழ்பெற்ற விளம்பர நிறுவனங்கள் சீனாவின் கூட்டு முதலீட்டு வாரியங்களை நிறுவியுள்ளன. உலக விளம்பர மாநாட்டில் சீன அரசின் தொழில் மற்றும் வணிக நிர்வாக தலைமை ஆணையகத்தின் தலைவர் வான் சுன்பூஃ இது பற்றி அறிமுகப்படுத்தினார். அந்நிய வணிகர்கள் சீனாவில் முதலீடு செய்த விளம்பரத் தொழில் நிறுவனங்கள் சிறந்த முறையில் அலுவலில் ஈடுபட்டு லாபத்தைப் பெற்றுள்ளன. இத்துறையில் அளித்த வாக்குறுதியை சீன அரசாங்கம் தொடர்ந்து கடைப்பிடித்து 2006ம் ஆண்டுக்கு முன் அந்நிய வணிகரின் முதலீட்டுடன் கூடிய விளம்பர நிறுவனங்கள் சீனாவில் நிறுவுவதற்கு அனுமதி வழங்கும். இது பற்றி அவர் கூறியதாவது சீனா உலக வர்த்தக அமைப்பில் சேர்ந்த போது அளித்த வாக்குறுதியை நடைமுறைப்படுத்தும்.

2005ம் ஆண்டின் டிசெம்பர் திங்களுக்குள் விளம்பர சந்தை முழுமையாக திறந்து வைக்கப்படும். இதன் மூலம் விளம்பரப் பிரச்சாரத் துறையின் சர்வதேச மயமாக்க நிலை மேலும் உயரும் என்றார் அவர். எதிர்காலத்தில் சீனாவின் விளம்பரத் துறையின் வளர்ச்சி அரசாங்கத்தால் கவனம் செலுத்தப்பட்டும். துறைக் கொள்கையின் உதவி பெறும். சீனாவின் விளம்பரத் தொழில் நிறுவனங்களின் ஒட்டுமொத்த போட்டியாற்றை உயர்த்தி தொழில் கட்டமைப்பை சீராக்கி சர்வதேச சந்தையை நோக்கி முன்னேறுவதற்கு ஆதரவளிக்க விளம்பர நிர்வாகத்துக்குப் பொறுப்பான அரசு வாரியம் என்ற முறையில் அரசின் தொழில் மற்றும் நிர்வாக தலைமை ஆணையகம் மேலும் உற்சாகமான பயன் மிக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதாக வான் சுன்பூஃ தெரிவித்தார்.