• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-02 11:56:10    
நேயர் நேரம்56

cri
மலர்ச் சோலை நிகழ்ச்சியில் எண்ணற்ற மலர்களிடம் இருந்து தேனீ சேர்க்கும் தேனை போல நீங்கள் பல செய்திகளைச் சேர்த்து தருவது மிகவும் நன்றாக உள்ளது அதை கேட்டு நாங்கள் மிகவும் பயன் அடைந்து வருகிறோம். உழைப்பாளி இல்லத நாடு எங்கும் இல்லை என்பது உண்மை. சீனாவில் உள்ள உழைப்பாளர்களுக்கு 7 நாள் விடுமுறை அளித்திருப்பது அவர்களை மகிழ்விக்கிறது இதனால் மேலும் மக்கள் உழைக்க தயாராகி விடுகின்றனர். மனதில் மகிழ்ச்சியுடன் அவர்கள் உழைப்பாளி திருநாள் என்று கொண்டாடி மகிழ்கின்றனர். சிறப்பு இசை நிகழ்ச்சி இன்று எய்ட்ஸ் நோயாளிகளின் மீது நாம் அன்பும் ஆதவும் கட்ட வேண்டும் என்று சொல்லியது சீனத்து பாடல்களை மிக எளிமையான முறையில் எல்லோருக்கும் புரியவைத்த விஜயலட்சுமிக்கு நன்றி என்று பெரியகாலாப்பட்டு நேயர் பி சற்றிரசேகரன் தமது கடிதங்களில் குறிப்பிட்டார். அடுத்த ஆண்டு சீனாவில் வெளி நாட்டு வர்த்தக வேகம் இவ்வாண்டை விட குறைவாக இருக்கும் என பெய்சிங்கில் நடைபெற்ற பல்வேறு வணிகர்கள் கூட்டத்தில் சீன துணை தலைமை அமைச்சர் வூ இ அம்மையார் கூறிய கருத்துக்கள் கேட்டேன். சீன வணிகத்துறையின் மதிப்பீட்டின் படி 2004ம் ஆண்டு சீன வர்த்தக மதிப்பு ஒரு லட்சத்து பத்தாயிரம் கோடி அமெரிக்க டாலர் அளவை தாண்டக் கூடும். இது கடந்த ஆண்டை விட 30% விழுக்காடு அதிகம் தான். ஏற்றுமதி இறக்குமதியில் சமநிலை உருவாக்குவது அடுத்த ஆண்டில் சீன வெளிநாட்டு வர்த்தக பணியின் முக்கிய செயல் எனவும் நான் அறிந்து கொண்டேன் சீனாவில் மனித உரிமைகளை அரசியல் சட்டத்தில் சேர்ப்பது மற்றும் மனித உரிமை சட்ட கருத்தரங்கில் சீன தேசீய மக்கள் பேரவை நிரந்தர குழுத் துணைத் தலைவர் பேசியதை செய்தியின் மூலம் கேட்டேன். மனித உரிமைகளுக்கு நாடு மதிப்பும் உத்தரவாதமும் அளிக்க வேண்டும் எனும் கோட்பாடு அரசியல் சட்டத்தில் கடந்த மார்ச் திங்களில் சேர்க்கப்பட்டது. இதனால் சீனாவின் சட்ட அமைப்பு முறையின் சிறப்பு தகு நிலை உறுதி செய்யப்பட்டது. வரும் ஆண்டுகளில் மனித பற்றிய சில சட்ட விதிமுறைகளை வகுத்து சீர்ப்படுத்த இருப்பதை செய்தியில் கூறக் கேட்டேன். மனித உரிமைக்கு நாடு உரிமையும் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற கோட்பாடு சீனாவில் உண்மையான முறையில் நடைமுறைப்படுத்தபடும் என்று சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் குழுவின் துணைத் தலைவர் சியாங்ஜிங்குவா அவர்கள் கூறிய கருத்துகள் மனித நேயம் மிக்கவை என்று முனுகப்பட்டு பி கண்ணன் சேகர் தமது டிசம்பர் திங்கள் கடிதங்களில் பாராட்டியுள்ளார்.