• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-07 20:53:21    
GMS பற்றிய அடிப்படை தகவல்

cri

லெசான் ஆறு- மென்குங் ஆற்றின் நீளம் 4880 கிலோமீட்டராகும். ஆசியாவில் 6 நாடுகளுக்கு ஊடாக பாயும் ஒரேயொரு ஆசிய ஆறாக இது விளங்குகின்றது. "கீழை DANUBI ஆறு"என இது அழைக்கப்படுகின்றது. சீனாவின் சிங்காய் திபெத் பூமியிலுள்ள தாங்குலா மலையில் இது உருவாகி யுநான் மாநிலத்தின் சிசான்ப்பைனான் வழியாக செல்கின்றது. சீனாவில் ிது லெசாங் ஆறு என்று அழைக்கப்படுகின்றது. சீனாவுக்கு வெளியே ஓடும் பகுதி மென்குங் ஆறாக அழைக்கப்படுகின்றது. மியன்மர், லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா, விய்ட்நாம் ஆகிய நாடுகளுக்கு ஊடாக இந்த ஆறு பாய்ந்து கடைசியில் சீனாவின் தெந் கடலில் சேர்கின்றது.

பெரிய மென்குங் ஆற்றின் உள் வட்டார ஒத்துழைப்பு அமைப்பு ஆசிய வளர்ச்சி வங்கியின் ுதவியுடன் உருவாக்கப்பட்ட பல வளர்ச்சி அமைப்புக்களில் ஒன்றாகும். 1992ம் ஆண்டில் இது நிறுவப்பட்டது. ஆசிய வங்கி இது வரை வெற்றி பெற்ற நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்றாகும். இந்த அமைப்பின் பொருளாதார ஒத்துழைப்பு சமத்துவம், பரஸ்பர நம்பிக்கை, ஒன்றுடன் ஒன்று நலன் தருவதென்ற அடிப்படையில் அமைந்துள்ளது. வளரும் நாடுகள் ஒன்றுக்கு ஒன்று ஒத்துழைத்து ஒன்ரு சேர்ந்து தாங்களாகவே வளம் பெற உதவும் அமைப்பு முறைமையாகும். பொருளாதார தொடர்பை வலுப்படுத்துவதன் மூலம் உள் வட்டாரத்தின் பொருளாதார வளர்ச்சியை விரைவுப்படுத்தும் நடைமுறை அமைப்பு முறையும் இது வாகும்.

கிழக்காசிய-மென்குங் பகுதி உள் வட்டார ஒத்துழைப்பை வளர்ப்பதில் உற்சாகத்துடன் பங்கேற்கும் நாடாக சீனா திகழ்கின்றது. இவ்வமைப்பின் வளர்ச்சியும் ஒத்துழைப்பும், சீனாவுக்கும் கிழக்காசிய நாடுகளுக்குமிடையில் பொருளாதார உறவு வளர்வதற்கான முக்கிய காரணமாகும். சீன-கிழக்காசிய சுயேச்சை வர்த்தக மண்டலத்தை நிறுவுவது என்பது சீனா முன்மொழிந்த உருப்படியான நடவடிக்கையாகும்.

                                                          ராணுவ வெறி என்றால் என்ன

அண்மையில் ஜப்பானிய வலது சாரி தீவிரவாதிகள் ராணுவ வெறியைப் பாராட்டுகின்றனர் ராணுவ வெறி என்றால் என்ன பொருள் என்று சீனாவின் ஆன்குய் மாநிலத்தின் நேயர் லீ யா நான் கேட்கிறார்.

ராணுவ வெறியானது படைபலத்தையும் ராணுவ விரிவாக்கத்தையும் போற்றுவது ஆக்கிரமிப்பையும் விரிவாக்கத்தையும் நாட்டு வளர்ச்சியின் அடிப்படையாக கருதி தேசத்தை முழுமையான ராணுவ கட்டுப்பாட்டில் வைப்பதாகும். அரசியல், பொருளாதாரம், பண்பாடு, கல்வி ஆகியவை போன்ற அரசின் அலுவல்களில் படைவீரர்களை ஈடுபடுத்தி வெளிநாட்டு போர்களில் பங்கேற்று சேவைபுரியும் சிந்தனை மற்றும் அரசியல் அமைப்பை வளர்ப்பது என்றும் பொருள்படுகின்றது. 2வது உலக போருக்கு முன் ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகள் ராணுவ வெறி நாடுகளாக கருதப்பட்டன. பாசிஸ் வாதம் இந்த நாடுகள் முழுமையான நெருக்கடிக்குள்ளாக்கப்பட்ட போது ராணுவ வெறி அளவுக்கு மீறி வெளிப்பட்ட ஒரு வடிவமாகும்.

ராணுவ வெறி கொடூரமானது பிற்போக்கானது. மனித குலத்துக்கு பேரழிவை ஏற்படுத்தியது. சமாதானத்தை மறுத்தல், போர் தவிர்க்க முடியாதது என்ற கருத்தில் உறுதியாக நிற்பது, போர் அருமையான ஆர்வம் கொண்ட விஷயமாகும் என்பது அதன் அடிப்படை தத்துவமாகும். அதன் உருப்படியான தோற்றத்தை பார்த்தால் குறிப்பிட்ட நாட்டின் அரசியல், பொருளாதாரம், சமூக வாழ்க்கை ஆகியவை ராணுயமயமாக்கப்பட வேண்டும். வெளிநாடுகளுடன் பழகும் போது ஆக்கிரமிப்பு மற்றும் விரிவாக்க கொள்கை பின்பற்றப்பட வேண்டும். ராணுவ வெறி நாடுகளில் போர் பிரிவது அரசின் முக்கிய குறிக்கோளாகும். நாடு இருப்பும் வளர்ச்சியும் முக்கியமாக வெளிநாடுளைக் கொள்ளையடித்தல் விரிவாக்கம் ஆகியவற்றை சார்ந்திருக்கின்றது.