• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-09 19:28:04    
காளான் கோழி சூப்

cri

கலைமகள்—அடுத்து, சுவையான சூப் தயாரிப்பு பற்றி கூறப்போகின்றேன். சத்து அதிகமான இந்த சூப், சீனாவின் தென்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் மிகவும் விரும்பமானது.

ராஜாராம்—அப்படியா!தென் சீனாவிலுள்ள குவாங் துங் மாநிலத்தின் மக்கள், சூப் தயாரிபதில் கெட்டிக்காரர்கள் என்று அங்கு வாழும் தமிழ் நண்பர்கள் சொல்லக் கேட்டேன். அவர்கள் தயாரிக்கும் சூப் அனைத்தும், உடம்புக்கு நல்லது. அல்லாவா?

கலை—ஆமாம். அவர்கள், பல்வேறு காய்கறிகள், இறைச்சி, மூலிகை ஆகியவற்றை அளவாகக் கலந்து, உடல் நலத்துக்கு பயன் தரும் வகையில், சூப் தயாரிக்கின்றனர். இன்று நான் அறிமுகப்படுத்தும் இந்த காளான், கோழி இறைச்சி சூப்பை குடித்தால், நமது உடம்பின் நோய் தடுப்பு ஆற்றல் அதிகரிக்கும்.

ராஜாராம்—அப்படியா! முதலில், இந்தச் சூப் தயாரிக்கத் தேவைப்படும் பொருட்களைச் சொல்லுங்கள்.

கலை—காளான், 200 கிராம். கோழி இறைச்சி, 200 கிராம்

முட்டை ஒன்று, மாவு 50கிராம்,

கொஞ்சம் வெங்காயம், இஞ்சி

உப்பு, எள்ளு எண்ணெய் 5 கிராம்

ராஜாராம்—சரி, நான் திரும்ப சொல்லட்டுமா? இனி, காளான் கோழி சூப் தயாரிக்கலாம். அதன் தயாரிப்பு முறையை நீங்கள் சொல்லூங்க

கலை—முதலில், கோழி இறைச்சி உருண்டைத் தயாரிக்க வேண்டும். காளான்களை நன்றாக சுத்தம் செய்யவும். காளானோடு கோழி இறைச்சியை சேர்த்து சிறுசிறு துண்டுகளாக நறுக்க வேண்டும். பிறகு, அதை, பிசைந்த மாவு போன்று, பிசைய வேண்டும். இதில், மாவு, நீர், முட்டை, கொஞ்சம் உப்பு, எள்ளு எண்ணெய், சிறுசிறு இஞ்சி துண்டுகள் ஆகியவற்றை சேர்த்து, நன்றாக கிளற வேண்டும். பிறகு, நீர் சேர்த்து பிசைந்து, சிறுசிறு உருண்டைகளாக கையால் பிடிக்கணும். பந்து வடிவில் காளான் கோழி உருண்டை மேலும் அழகாக இருக்கும். சுமார் 15 உருண்டைகள் பிடிக்கலாம்.

ராஜாராம்—சரி. அந்த அழகான 15 கோழி இறைச்சி உருண்டைகள், தட்டில் வைக்கப்பட்டுள்ளன. கலைமகள், அப்புறம், என்ன செய்யப் போறீங்க.

கலைமகள்—இனி, வாணலியை அடுப்பின் மீது ஏற்றலாம். நீரை வாணலியில் விட்டு கொதிக்கவிட வேண்டும். நீர் கொதித்த பிறகு, காளான் கோழி இறைச்சி உருண்டைகளை அதில் போட்டு, வேக வைக்கவும். இப்போது, கிளற கூடாது. தீயை தணிவாக எரிய விட்டு, உருண்டைகளை வேகவைக்கணும்.

ராஜா—எவ்வளவு நேரம் வேகணும்?

கலைமகள்—உருண்டைகள், வெள்ளை நிறமாக மாறிய பின்பு, 5 நிமிடத்துக்கு பிறகு, உருண்டைகள், கொதி நீருக்கு மேலே மிதந்து வரும் போது, காளான் கோழி இறைச்சி சூப் தயார்.

ராஜாராம்—ஒ, சுவையாக இருக்கும் போலிருக்கே.

கலை—ஆமாம். இந்த சூப், குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் மிகவும் நல்லது.