• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-09 11:39:24    
திபெத்தின் தேசிய இன பிரதேச தன்னாட்சி அமைப்பு முறை

cri

அழகான திபெத்

1965ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் திபெத் தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்டது. திபெத், அமைதியான முறையில் விடுதலை பெற்ற 14 ஆண்டுகளுக்குப் பின் நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை முறைமை சமூகத்திலிருந்து அனைவரும் சம உரிமையை அனுபவிக்கும் சோஷலிச துவக்க நிலை கட்டத்தில் நுழைந்துள்ளதை இது கோடிட்டுக்காட்டுகின்றது. அப்போது முதல், சீன அரசு, திபெத்தில் தேசிய இன பிரதேச தன்னாட்சி அமைப்பு முறையை செயல்படுத்தத் துவங்கியது. இந்த அமைப்பு முறையில், திபெத்திலுள்ள பத்து லட்சம் மக்கள், உரிமையாளராகி, பிரபுக்களாலும் உயர் நிலை மதகுருமார்க்களாலும் கட்டுப்படுத்தப்பட்டிருந்த 12 லட்சத்துக்கும் அதிகமான சதுர கிலோமீட்டம் நிலத்தை சொந்தமாக நிர்வகிக்க துவங்கினர்.

61 வயதான திபெத் தன்னாட்சிப் பிரதேசத்து தேசிய மக்கள் பேரவை நிரந்தரக்கமிட்டியின் தலைவர் லே ஜிங், திபெத்தின் புதிய மற்றும் பழைய சமூக முறையில் வாழ்ந்தவர். தவிரவும், தேசிய இன பிரதேசத் தன்னாட்சி அமைப்பு முறையை நேரில் கண்டவர். அவர் எங்களிடம் கூறியதாவது:

"திபெத்தின் சியாங் ஷி மாவட்டத்தில் உள்ள ஒரு ஏழைப் பண்ணை அடிமை வீட்டில் பிறந்தேன். சிறு வயதிலிருந்தே, நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை முறைமையின் பிற்போக்கு, இருள், பிரபுக்கள், கோயில்கள், உயர் நிலை மதகுருமார்கள் ஆகிய மூன்று ஆட்சியாளர்கள் உழைப்பாளர்களைச் சுரண்டி வந்திருப்பதை கண்கூடாகக் கண்டேன். 1951ம் ஆண்டு திபெத், அமைதியான முறையில் விடுதலை செய்யப்பட்டது. இதனால், நவீன கல்வியை பெறும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நான், ஆசிரியராக பணிபுரிந்தேன். வட்டார, மாவட்ட வாரியங்களிலும் தன்னாட்சி பிரதேச அமைப்புகளிலும் லாசா நகரிலும் வேலை செய்தேன். 1995ம் ஆண்டுக்குப் பின், முக்கியமாக, தன்னாட்சிப் பிரதேசத்தின் கட்சி கிளை மற்றும் அரசிலும் பணி புரிந்தேன். 2003ம் ஆண்டு திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தேசிய மக்கள் பேரவையில் ஆள் மாற்றம் ஏற்பட்ட பின், நான், தன்னாட்சிப் பிரதேசத்தின் தேசிய மக்கள் பேரவை நிரந்தரக்கமிட்டி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்றைய தலைமைப்பீடத்தில் பணிபுரிகின்றேன். பழைய திபெத்தில் இது அறவே முடியாதது. என்னைப் போன்ற திபெத் இன தலைமை ஊழியர்கள் பலர் இருக்கின்றனர்." என்றார்.

1  2  3