• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-11 16:45:00    
வெள்ளரிக்காய் ஊறுகாய்

cri
ராஜாராம்—வணக்கம் நேயர்களே. உங்களோடு சேர்ந்து சீன உணவுவகைகளை சுவைக்க ஆர்வமாகக் காத்திருப்பது ராஜாராம். கலைமகள், இனி என்ன சைவ உணவு சொல்லப் போறீங்க?

கலை—இது வித்தியாசமான ஊறுகாய். இதன் பெயர், வெள்ளரிக்காய் ஊறுகாய். இதில் மிளகாயும் சேர்க்கலாம்.

ராஜாராம்—சரி, சொல்லுங்கள்.

கலை—முதலில், வெள்ளரிக்காய்களைச் சுத்தம் செய்யுங்கள். பிறகு ஒவ்வொரு வெள்ளரிக்காய்யையும், எட்டு நீளமான துண்டுகளாக நறுக்கி, தட்டில் வையுங்கள். அப்புறம், கொஞ்சம் உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் ஊறட்டும். உப்பிலும், வெள்ளரிக்காயிலும் தண்ணீர் விட வேண்டும். பிறகு, வெள்ளரிக்காய்களை வேறு தட்டில் வைத்து, சர்கரை, வினிகர், கொஞ்சம் உப்பு ஆகியவற்றை சேர்த்து, நன்றாக கிளற வேண்டும்.

ராஜாராம்—சரி, மிளகாய், வெங்காயம் மற்றும் இஞ்சி சிறிய துண்டுகளாக அரிந்து வைத்துள்ளேன். இதை இப்போது சேர்க்கலாமா?

கலைமகள்—சேர்க்கலாம். கடைசியாக, வாணலியை அடுப்பின் மீது வைத்து, கொஞ்சம் எண்ணெயை ஊற்ற வேண்டும். பிறகு, சில மிளகுகளை எண்ணெயில் போட்டு, மிதமான சூட்டில் 20 வினாடிகளாக வறுக்கவும். அதை வெள்ளரிக்காய் தட்டில் போடவும். இப்போது ராஜா, இதவரை, மிளகாய் வெள்ளரிக்காய் ஊறுகாய் தயார்.

ராஜாராம்—ஓ, சுவை நன்றாக இருக்கிறது.

கலைமகள்—ஆமாம். சீன மக்கள், வீட்டில் இந்த இரண்டு வகை சைவ ஊறுகாய்களை அடிக்கடி சமைக்கிறார்கள்.

ராஜாராம்—அப்படியானால் அசைவ ஊறுகாயும் உண்டா? கலைமகள், அடுத்த முறை என்ன சமையல்?

கலைமகள்—சரி, அடுத்த வாரம், நான் சிசுவான் மாநிலத்தில் மிகவும் பிரபலமான ஒரு வகை மிளகாய் சாஸ் பற்றி கூறுவேன்.

ராஜாராம்—அப்படியா!அதன் தயாரிப்பு முறை எளிதாக இருக்குமா?

கலைமகள்—மிகவும் எளிது. அதற்கு தேவைப்படும் பொருட்களும் மிகவும் எளிதாக கிடைக்கும். மிளகாய், வெள்ளைப்பூண்டு, இஞ்சி, உப்பு முதலியவை முன்கூட்டியே எடுத்துவைத்திருங்கள்.