• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-13 08:39:53    
செல்லிட பேசி மூலம் டிவி பார்ப்பது

cri

தற்போது செல்லிட பேசி மக்கள் வாழ்க்கையில் இன்றியமையாத முக்கிய பகுதியாகிவிட்டது. தொலை பேசி, குறுந் தகவல் அனுப்புவது, படம் எடுப்பது, தொலை பேசி எண்ணை சேமிப்பது போன்ற திறன்கள் செல்லிட பேசிக்கு உள்ளன. அறிவியல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியுடன் தற்போது சீன மக்களை பொறுத்தவரை, செல்லிட பேசி வேறு புதிய திறன் கொண்டுள்ளது. அதாவது அதன் மூலம் மக்கள் டிவி நிகழ்ச்சியை பார்க்க முடியும்.

நீங்கள் கேட்டது செல்லிட பேசியில் ஒலித்தப்பட்ட திரைபடத்தின் இசையாகும். "சந்திப்பு"எனும் திரைப்படம் சிறப்பாக செல்லிட பேசி மூலம் ஒளிபரப்புவதற்காக சிறப்பாக தயாரிக்கப்பட்டது. மோட்டர் சைக்கின் பந்தயத்தில் ஈடுபுடும் விளையாட்டு வீரர்களின் முக்கோணக் காதல் கதையை இந்த திரைப்படம் கூறுகின்றது. 25 நிமிடம் ஒளிபரப்பாகும் இந்த படத்தில் 5 பகுதிகள் உள்ளன.

இது பற்றி செல்லிட பேசி நிகழ்ச்சி தயாரிப்புக்குப் பொறுப்பான பெய்சிங் லேஸ் நிறுவனத்தின் தலைமை மேலாளர் லியு ஹொன் கூறியதாவது இந்தத் திரைப்படத்தை 5 பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு பிரதிக்கும் 5 நிமிடம் ஒதுக்கி செல்லிட பேசி மூலம் நிகழ்ச்சிகளை கண்டுகளிப்பதற்கு ஏற்ப வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால் செல்லிட பேசியின் திரை சிறியது. திரையை நீண்ட நேரம் கண்டால் கண்களுக்கு களைப்பு ஏற்படும். ஆகவே ஒரு பகுதிக்கு 5 நிமிடம் என்ற கணக்கில் திரைப்படம் தயாரிப்பது செல்லிட பேசியைப் பயன்படுத்துவோருக்கு வசதி தரும் என்றார் அவர்.

பெய்சிங்கில் அந்நிய தொழில் நிறுவனத்தில் பணிபுரியும் யான் சான் என்ற பெண்மனி தன் செல்லிட பேசி மூலம் "சந்திப்பு"எனும் திரைப்படத்தைக் கண்டு ரசித்தார். பாரம்பரிய திரைப்படத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் "சந்திப்பு"எனும் திரைப்படம் குறுகியது. அம்சம் எளிதானது. ஆனால் கதையின் திரைக் காட்சிகள் அருமையானவை. நடிகர்கள் மாடலாக காணப்படுகின்றனர். ஆகவே இதை கண்டுரசிப்பதில் களைப்பு இல்லை. தவிர அவர் செய்தியாளிடம் தமது உணர்வை தெரிவித்தார் என்னை பொறுத்தவரை செல்லிட பேசி மூலம் டிவி பார்ப்பது முக்கியமாக காருக்காக காத்திருக்கும் போதும் விமானத்துக்காக காத்திருக்கும் போதும் நான் செல்லிட பேசி மூலம் டிவியை பார்க்கிறேன். இந்த வழி மூலம் நேரம் கழிக்க முடிகிறது. வாழ்க்கையில் மேலும் அருமையான தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிகின்றது என்றார் அவர்.

அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் செல்லிட பேசி டிவி வசதி, நன்கு வளர்ச்சி அடைந்த ஊடகமாக சாதாரண மக்களின் வாழ்க்கையில் இடம் பெறுகின்றது. விமானத்திற்காக காத்திருக்கும் கூடத்திலும் உணவு விடுதிகளிலும் மக்கள் செல்லிட பேசி மூலம் டிவி பார்ப்பதை அடிக்கடி காணலாம். இந்த பொழுதுபோக்கு வடிவம் மூலம் ஓய்வு நேரத்தை பயனுள்ள முறையில் கழிக்கலாம். ஆகவே அது மென்மேலும் வரவேற்கப்படுகின்றது.

சீனாவில் செல்லிட பேசி மூலம் டிவி பார்ப்பது 2004ம் ஆண்டின் முடிவில் தோன்றியது. சீன தகவல் தொலை தொடரமைப்பு மெதுவாக வளர்ந்ததால் கடந்த ஆண்டின் முடிவில் தான் டிவி நிகழ்சியை காண்பிப்பதற்கு தேவைப்படும் சூழல் உருவானது. தவிர, டிவி பார்க்க வல்ல செல்லிட பேசின் விலை அதிகம். பொதுவாக 5000 யுவானுக்கு மேலாக செலவிட வேண்டும். இது செல்லிட பேசி மூலம் டிவி சீனாவில் தாமதமாக பரவுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

தற்போது செல்லிட பேசி மூலம் டிவி நிகழ்ச்சிகளை பார்ப்பது சீனாவில் புதுமையானது. பெய்சிங், ஷாங்காய், குவாங் சோ முதலிய பெரிய நகங்களில் இளைஞர்களிடேயே இது பரவலாகியது. அவர்கள் டிவி பார்ப்பது தவிர செய்திகள், வானிலை அறிவிப்பு மற்றும் M டிவி இசை நிகழ்ச்சிகளையும் அவர்கள் பார்க்கின்றனர். இந்த நிகழ்ச்சிகள் செல்லிட பேசி டிவி தயாரிப்புத் தொழில் நிறுவனங்கள் அல்லது நிகழ்ச்சி தயாரிப்பு வணிகர்களின் சிந்தனையைத் தூண்டுகின்றன.

சியோ லி என்னும் பெண் செலிட பேசி மூலம் MTV நிகழ்ச்சியை கண்டு ரசிப்பதில் மிகவும் அக்கறை செலுத்துகின்றார். இது பற்றி அவர் கூறியதாவது செல்லிட பேசி மூலம் சிறப்பு இணையத்திற்கு சென்று சிறப்பு எம்டிவி சென்னல் மூலம் பல பாடல்களை கேட்டு ரசிக்கலாம். பின் அவற்றை தேர்வு செய்து DOWNLOD நுட்பத்தை பயன்படுத்தி செல்லிட பேசியில் பதிவு செய்யலாம் என்றார் அவர்.

செல்லிட பேசி மூலம் எம்டிவி காட்சியின் ஒலி கணிணி அல்லது தொலைகாட்சியில் இருப்பது போல அவ்வளவு சிறப்பானக இல்லை. ஆனால் செல்லிட பேசி உங்களுடன் சேர்ந்தே இருப்பதால் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் எந்நேரத்திலும் பார்க்கலாம். பாடல்களைப் பாட மிகவிரும்பும் எனக்கு இது மிகவும் முக்கியத்தும் வாய்ந்தது என்றார் அவர்.

மூன்றாவது தலைமுறை செல்லிட தொலை தொடர்பு தொழில் நுட்ம் சீனாவில் விரைவாக வளர்கின்றது. தகவல் தொலை தொடர்பின் ஊடனுப்பி வேகம் பெருமளவில் அதிகரிக்கும். செல்லிட பேசி மூலம் டிவி ஒளிபரப்பு தரமும் பெரிதும் மேம்படும். இந்த முயற்சி செல்லிட பேசி டிவி துறை சீனாவில் வளர்வதை மேலும் ஊக்குவிக்கும்.

சீனாவில் மக்கள் செல்லிட பேசியை பயன்படுத்துவதில் பழையதை மாற்றி புதியது வாங்கும் போக்கு காணப்படுகின்றது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் சீனாவில் வண்ண திரை கொண்ட செல்லிட பேசி குறைவு. விலையும் அதிகம். இப்போது விடியோ வசதி கொண்ட செல்லிட பேசி விற்பனை விழுக்காடு சந்தையில் அதிகமாக உள்ளது. அதன் விலையும் 2000 யுவான் மட்டும் இருக்கின்றது. ஆகவே எதிர்காலத்தில் டிவி நிகழ்ச்சி காணும் வசதியுடைய செல்லிட பேசி சீன மக்களின் வாழ்க்கையில் ஒரு வழக்கமாக மாறிவிடும்.