• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-15 22:38:05    
சீனாவில் உறைப்பனிச் சறுக்கல்

cri

உறைப்பனிச் சறுக்கல் ஒரு செலவு மிக்க விளையாட்டாகும். இந்த விளையாடு முன்பு சீனாவில் விரிவாக நடத்தப்படுவதில்லை. ஆனால், கடந்த சில ஆண்டுகளில், சீனப் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியுடன், மென்மேலும் அதிகமான சீன நகரவாசிகள் இந்த விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர். சீனாவின் வடப் பகுதியில் டிசம்பர் திங்கள், உறைப்பனிச் சறுக்கும் மிக சிறந்த காலம்.

கடந்த சில நாட்களில் பெய்சிங்கிற்கு அருகிலுள்ள 12 உறைப்பனிச் சறுக்கல் தலங்களுக்கு மக்கள் திரள் திரளாக வந்து விளையாடி வருகின்றனர். சராசரியாக நாள்தோறும் இந்த 12 தலங்கள் 20 ஆயிரம் பேரை வரவேற்றன. டிசம்பர் 4 ஆம் நாள் பெய்சிங்கின் வானிலை பூஜியத்துக்கு கீழ் இருந்தது. கடந்த 50 ஆண்டுகளின் இதே காலத்தில் வெப்பநிலை மிக தாழ்ந்தது இது. இருப்பினும் பெய்சிங்கின் மேற்கு புறநகரிலுள்ள லுங்பெங்ஷான் உறைப்பனிக் தலம் ஆயிரத்துக்கும் அதிகமானோரை வரவேற்றது.

முன்பு சீனாவில் உறைப்பனிக் தலங்கள் முக்கியமாக மிகவும் குளிரான வடக் கிழக்குப் பகுதியில் குவிந்திருந்தன. இப்பொழுது, செயற்கை உறைப்பனித் தொழில் நுட்பம் முலம் சீனாவின் உள்மங்கோலியா, ஹொப்பெய் மாநிலம், சிங்கியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம், பெய்சிங் முதலிய இடங்களிலும் உறைப்பனிக் தலங்களின் எண்ணிக்கை தீவிரமாக அதிகரித்துவருகின்றது.

தென் மேற்கு சீனாவின் சுச்சுவான் மற்றும் யுன்னான் மாநிலங்களிலும் உறைப்பனிக் தலங்கள் காணப்படுகின்றன. சீனாவின் பெய்சிங், ஷாங்கை மாநகரங்களில் ஆண்டுமுழுவதும் உறைப்பனிச் சறுக்கல் விளையாட்டில் ஈடுபடக் கூடிய அறைக்குள் உறைப்பனிக் தலங்களும் உள்ளன. உறைப்பனிக் தலங்கள் அதிகரிப்பதுடன், இந்த விளையாட்டில் விளையாடுபவரின் எண்ணிக்கையும் தீவிரமாக அதிகரித்துள்ளது.

1999ஆம் ஆண்டு சீனாவில் சில பத்தாயிரம் பேர் மட்டும் உறைப்பனி சறுக்கினர். ஆனால் 2004ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 30 லட்சமாக அதிகரித்தது. தற்போது சீனாவில் உறைப்பனிச் சறுக்கல், விளையாட்டு வீரர்களின் சிறப்புத் தொழில் அல்ல. அது, பொது மக்கள் பரவலாக பங்குகொள்ளும் ஒரு விளையாட்டாக மாறியுள்ளது என்று சீன உறைப்பனிச் சறுக்கல் சங்கத்தின் துணைத் தலைமை செயலாளர் ஆன்லின்பின் கருத்து தெரிவித்தார்.