• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-04 13:10:07    
வங்காய வடையின் தயாரிப்பு வழி முறை

cri

கலை......வங்காய வடை தயாரிப்பு வழி முறை பற்றி சொல்கின்றோம். முதலில் வெங்காயத்தின் வெளிப்புற தோலை உரித்து வெங்காயத்தின் நடுவிலே வெட்டி 1 சென்டி மீட்டர் அகலமுள்ள வட்டவட்டமாக வெட்ட வேண்டும். வட்டமான வெங்காய வில்லைகளை தட்டில் வையுங்கள். அப்புறம், கோதுமை மாவு, முட்டை, தண்ணீர் உப்பு, மிளகு ஆகியவற்றை மாவுடன் சேர்த்து நன்றாக பிசைய வேண்டும். நன்றாக பிசைந்த பின் மாவு கெட்டியாக இருக்கும். இந்த நிலையில் வட்டமான வெங்காய வில்லைகளை உள்ளே போடுங்கள். ஒவ்வொரு வெங்காய வில்லையும் மாவுடன் ஒட்ட வேண்டும்.

ராஜா.....மாவில் ஒட்டிய வெங்காய வில்லைகளை அப்படியே தட்டில் வைக்க வேண்டுமா?

கலை.....ஆமா. இப்போது செய்ய வேண்டிய வேலை வாணலியில் உணவு எண்ணெய் விட்டு கொஞ்சம் சூடானதும், மாவு ஒட்டிய வெங்காய வில்லைகளை வாணலியில் ஒவ்வொன்றாக போடுங்கள். பின் தீயை லேசாக அளவில் அதிகரியுங்கள். வெங்காய வடைகள் தங்க நிறமாக பொறிந்த பின் வெளியே எடுத்து தட்டில் போடுங்கள்.

ராஜா.....இப்போது வெங்காய வடை தயாரா.

கலை....ஆமாம். தண்ணீருக்கு பதிலாக பீர் பயன்படுத்தி மாவுபிசைந்தால் தண்ணீரை விட்டு பிசையப்பட்ட மாவைக் கொண்டு சுடப்பட்ட வடையை விட ருசி நன்றாக இருக்கும். தமிழ் நாட்டிலே இந்த வழக்கம் இல்லை. பரவாயில்லை. சோதனை முறையில் செய்து சுவை பாருங்கள்.

ராஜா.....நண்பர்களே. பீர் கலந்த வெங்காய வடை சுட்டு தின்றால் போதை ஏறாது கவலை வேண்டாம். அப்படித்தானே.

கலை....இத்துடன் சீன உணவு அரங்கம் நிகழ்ச்சி நிறைவு பெறுகின்றது. அடுத்த முறை மீண்டும் சந்திப்போம்.