• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-05 13:36:52    
சிறுபான்மை தேசிய இனப் பண்பாடு பாதுகாப்பு

cri

துங் இனத்தவர்கள்

பொருளாதார வளர்ச்சியுடன் சில சிறுபான்மை தேசிய இனங்களின் சிறுப்பு பண்பாடு பாதிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை தேசிய இனங்களின் பாரம்பரிய பண்பாடுகளை திரட்டுவது, சீர்செய்வது, பாதுகாப்பது ஆகியவற்றில் உதவிடும் வகையில், சீன அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, துங் இனத்தவர்கள், பாடுவதற்கு மிகவும் விரும்புகின்றனர். அவர்கள் தலைமுறை தலைமுறையாக பாடி வந்துள்ள தேசிய இனப்பாடல்கள் உலகப் புகழ்பெற்றிருக்கின்ரன. அரசின் ஏற்பாட்டில் நிபுணர்கள் பாடல்வரிகளை சேகரித்து, பாடகர்களுக்கு பயிற்சி தந்துள்ளனர். தவிரவும், பொருள் சாரா உலகப் பண்பாட்டு மரபுச் செல்வத்தில் சேரவும் அரசு விண்ணப்பிக்கும்.

சிறுபான்மை தேசிய இனத்து மொழி-எழுத்துகளின் பயன்பாடு மற்றும் பாதுகாப்பிலும், அரசு, பல்வகை முறைகளை மேற்கொண்டுள்ளது. சீன அரசியல் அமைப்பு சட்டத்திலும், தேசிய இனப் பிரதேசத் தன்னாட்சி சட்டத்திலும் சிறுபான்மை தேசிய இனங்கள் தத்தம் மொழிகளையும் எழுத்துகளையும் பயன்படுத்த முடியும் என்று வகுத்துள்ளது. தொடர்புடைய அதிகாரி சூ வே சுங் கூறியதாவது

"சிறுபான்மை தேசிய இனங்கள், தத்தம் மொழிகளையும் எழுத்துக்களையும் பயன்படுத்துவதற்காக, பொருளாதாரம், சமூகம் உள்ளிட்ட துறைகளில் கூடிய அளவு சீரான சூழலை உருவாக்கப் பாடுபடுகின்றோம் என்றார்" அவர்.

தற்போது, சீனாவிலுள்ள 13 சிறுபான்மை தேசிய இனப்பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இப்பள்ளிகள் தெள்ளத்தெளிவான தனிச்சிறப்பு மிக்கவை அவற்றின் பாடத்துறை மற்றும் சிறப்புத் தொழில் அமைப்பில் 70 விழுக்காடு மாணவர்கள், சிறுப்பான்மை தேசிய இனங்களைச் சேர்ந்தவர்கள். நாடு முழுவதும் 30 லட்சம் தேசிய இனத்து ஊழியர்களில் குறிப்பிடத்தக்க அளவு ஊழியர்கள் இப்பள்ளிகளில் படித்து தேறியவர்கள். தேசிய இனப் பிரதேசங்களின் வளர்ச்சியில் இந்த ஊழியர்கள், முக்கிய பங்குபணியை ஆற்றியுள்ளனர்.