• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-04 16:27:35    
தயாரிப்பு முறை

cri
ராஜா:சரி, நான் இதை திருப்பிச் சொல்கிறேன்?

இனி இதை எப்படி தயாரிக்கிறது. சொல்லுங்க

கலை:முதலில், வெள்ளை மொச்சை மற்றும் வெள்ளைத் தாமரை விதைகளை முதல் நாள் இரவே வென்னீரில் ஊறவையுங்கள். பிறகு, மற்ற பொருட்களை எல்லாம் சுத்தம் செய்து கொள்ளுங்கள். அவற்றை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு, போதிய அளவு தண்ணீர் ஊற்றுங்கள். வேக வைப்பதற்கு இந்த தண்ணீர் தேவை.

இனி, வெள்ளை மொச்சை மற்றும் வெள்ளைத் தாமரை விதைகளை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு 20 நிமிடம் கொதிக்க விடுங்கள். பிறகு, புழுங்கல் அரிசி, பச்சரிசி, முழு கோதுமை, பாசிப்பயறு, உடைத்த செஸ்ட்நட் இப்படி எல்லாப் பயறுகளையும் அதில் போடுங்கள். எல்லாம் சேர்ந்து நன்றாக கொதித்ததும், தீயை தணிவாக எரியவிட்டு, 40 நிமிடங்களுக்கு வேகவிடுங்கள். மொச்சை நன்றாக குழைவாக வெந்து விட வேண்டும். அடுத்து, தேனையும், பொடி செய்த வெல்லத்தையும் போட்டு கிண்டி விடுங்கள். இனி என்ன குடிக்க வேண்டியது. தானே!

ராஜா:கஞ்சியோட ஒருகதை இருக்குதுன்னு சொன்னீங்களே!

கலை:பல கதைகள் இருக்குது. ஒரு பிரபலமான கதை சொல்றேன்.

புத்தர் சாக்கிய முனி ஆறாண்டுகள் மலைகளில் அலைந்து திரிந்தார். உண்மையைத் தேடினார். கடைசியில் கலைத்துப் போய் அடிவாரத்திற்கு வந்த அவர், ஒரு ஆற்றங்கரையில் உணவுப்பிச்சை எடுத்தார். அப்போது வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு பெண், பல்வேறு தானியங்களையும், பயறுகளையும் போட்டு சமைத்த கஞ்சியை கொடுத்தாள். அந்த கஞ்சி அவருக்கு தெம்பு கொடுத்தது. தீவிரமாகக் கற்று ஞானம் பெற்று புத்தரானார்.

இந்த தினத்தைக் குறிக்கும் வகையில், இன்றைக்கும் புத்தக் கோயில்களில் ஏழைகளுக்கு கஞ்சி ஊற்றுகிறார்கள். பெய்ச்சிங்கில் உள்ள குவாங்குவா (Guang Hua) கோயிலிலும், Fayuan கோயிலிலும் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 7ஆம் நாள் காலை 6 மணி முதல் 7 மணி வரை, இந்தக் கஞ்சி ஊற்றுகிறார்கள். இந்தச் சம்பிரதாயம் கிழக்கு வமிச காலத்தில் இருந்து நடந்து வருகிறது.

இன்னொரு கதையும் இருக்கிறது. ஏழை விவசாயிக்கு மகனாக இருந்து மன்னரான மிங் வமிசம் பேரரசர் ச்சூ யுவான் ச்சாங், தமது இளம் பருவத்தில் பண்ணையாரின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது பசியால் வாடினார். சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. அப்போது வயலில் இருந்த ஒரு எலிவளையில் பல்வேறு வகையான தானியங்கள் நிறைய சேர்ந்திருப்பதைக் கண்டு, எடுத்துச் சாப்பிட்டார்.

ராஜா:தானியமும், பயறுகளும், தேனும் சேரும் போது நிச்சயம் சரியான சத்துணவாகத்தான் இது இருக்கணும்.

கலை:ஆமா, இருபதுக்கும் அதிகமான பொருட்கள் இதில் சேர்க்கப்படுது. மிகவும் மிருதுவாக, வழுவழு என்று சுவையாக இருக்கும் எளிதில் ஜீரணமாகும். முதியவர்களுக்கும், நோயினால் உடல் பலவீனமானவர்களுக்கும் இந்த கஞ்சி மிகவும் ஏற்ற உணவு.