• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-07 22:00:59    
திபெத்தின் மாற்றம்

cri

1965ம் ஆண்டு திபெத் தன்னாட்சிப் பிரதேசம், முதலாவது மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத்தொடரை நடத்தியது முதல் இன்று வரை, திபெத் தன்னாட்சிப் பிரதேச மக்கள் பேரவை, கருத்துக்கள், முன்மொழிவுகள், விமர்சனங்கள் என்று 7000 பிரதிகளை பெற்றுள்ளது. பிரதிநிதிகள் முன்வைத்த இவை, திபெத் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி நிலைமையுடன் தொடர்புடையவை. பல்வேறு தேசிய இன மக்களின் விருப்பத்தையும் கோரிக்கைகளையும் அவை முழுமையாகப் பிரதிபலிக்கின்றன.

திபெத்திய புத்த மத நம்பிக்கையுடையவர்கள் முக்கியமாக வசிக்கும் திபெத்தில், திபெத் இனத்தவர்கள், திபெத்தின் அரசுப் பணிகளில் பெரும்பான்மையாக உள்ளனர். குழந்தைகள், துவக்க நிலை பள்ளிகளில், 9 ஆண்டுகால கட்டாய கல்வியை இலவசமாக பெறுகின்றனர். திபெத் மொழி படிப்புக்கு முதலிடம் கொடுக்கப்படுகின்றது. அனைத்து அரசு அறிவிப்புகள், சட்ட ஆவணங்கள், திபெத் மொழியிலும் சீன மொழியிலும் வெளியிடப்படுகின்றன. திபெத்தின் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்களில் திபெத் மொழி நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. திபெத் இன மக்களும் திபெத்தில் உள்ள இதர சிறுபான்மை தேசிய இன மக்களும் சமமாக நடத்தப்படுகின்றனர். ஒற்றுமையாக வாழ்கின்றனர். மக்களின், சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு முழு உரிமை கிடைத்துள்ள அதே வேளையில், பாரம்பரிய பண்பாட்டை பேணும் உரிமையும் மத சுதந்திரமும் அனுபவிக்கின்றனர்.

திபெத்தில், தேசிய இனப் பிரதேசத் தன்னாட்சி அமைப்பு முறை நடைமுறைக்கு வந்துள்ள கடந்த 40 ஆண்டுகளில் பெறப்பட்டுள்ள மாற்றத்தை, தலைகீழான மாற்றமாக லே ஜிங் வர்ணித்தார். கடந்த சில ஆண்டுகளில், திபெத்தின் பொருளாதாரம் சீராக வளர்ந்து வருகின்றது. சமூகம் அமைதியாக உள்ளது. மக்களின் வாழ்க்கைத் தரம் தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. வரலாற்றில் மிகச்சிறந்த வளர்ச்சி கட்டத்தில் திபெத் இருக்கின்றது என்று அவர் கருதுகின்றார்.