• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-07 15:17:03    
உலகக் கோப்பை கால்பந்து போட்டி

cri

காலிறுதிப்போட்டிகளின் முடிவுகள்:

ஜெர்மனி, அர்ஜென்டினா, இத்தாலி, உக்ரேன், இங்கிலாந்து, போர்ச்சுகல், பிரேசில், பிரான்ஸ் ஆகிய 8 நாடுகள் உலகக்கோப்பையின் காலிறுதிச் சுற்றில் விளையாட தகுதி பெற்றன. இந்த அணிகளிலிருந்து அடுத்த கட்டமான அரையிறுதிச் சுற்றில் கலந்து கொள்ள 4 அணிகள் தெரிவு செய்யப்பட்டன. காலிறுதிச் சுற்று பந்தயங்களும், முடிவுகளும்.

ஜெர்மனி அர்ஜென்டினா நாடுகளிடையிலான காலிறுதி பந்தயத்தில் ஒதுக்கப்பட்ட நேரத்திலும், கூடுதலாக அளிக்கப்பட்ட நேரத்திலும் 1: 1 என்ற கோல் கணக்கில் சமநிலை நீடித்தது. ஆனால் காலிறுதிச் சுற்றில் சமநிலை என்பது கிடையாது, ஏதாவது ஒரு அணிதான் வெற்றியாளராக அடுத்த கட்டத்தில் நுழைய முடியும் எனவே, பெனால்டி ஷூட் அவுட் முரையில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும். இத்தகைய பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4: 2 என்ற வித்தியாசத்தில் ஜெர்மனி அணி அர்ஜென்டினாவை வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இத்தாலி உக்ரேன் இடையிலான காலிறுதிச் சுற்று பந்தயத்தில் 3: 0 என்ற கோல் வித்தியாசத்தில் இத்தாலி உக்ரேனை வென்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

இங்கிலாந்து போர்ச்சுகல் இடையிலான காலிறுதிச் சுற்று பந்தயத்தில் ஒதுக்கப்பட்ட நேரத்திலும், கூடுதலாக அளிக்கப்பட்ட நேரத்திலும் கோல் ஏதுமின்றி சமநிலை நீடித்தது. வெற்றியாளராக அடுத்த கட்டத்தில் நுழைய ஒரு அணியை தேர்ந்தெடுக்க, பெனால்டி ஷூட் அவுட் முறை பின்பற்றப்பட்டது. இதில் 1: 3 என்ற கணக்கில் இங்கிலாந்தை போர்ச்சுகல் வெற்றி பெற்றது.

மற்றுமொரு காலிறுதி பந்தயத்தில் கடந்த முறை உலக கோப்பையை வென்ற, உலகில் அதிக ரசிகர்களால் இம்முறையும் வெற்றி பெறும் விருப்ப அணியாக நின்ற பிரேசில் அணியும் பிரான்ஸ் அணியும் மோதின. காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கே தகுதி பெறுமா என்ற சந்தேகத்தில் நின்ற பிரான்ஸ் அணியினர் திறமையுடன் விளையாடி பிரேசிலின் உலகக் கோப்பை கனவுகளை சிதறடித்து 0: 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினர்.

காலிறுதிச் சுற்றில் பெருத்த ஏமாற்றமாக அர்ஜென்டினா, இங்கிலாந்து மற்றும் பிரேசில் அணிகள் தோல்வியை தழுவின. இவ்வணிகள் திறமையுள்ள ஆட்டக்காரர்களை கொண்ட அணிகள் என்பதோடு, உலகக் கோப்பை வெற்றியாளர் நாடுகளாகும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரையிறுதி சுற்று பந்தயங்களும், வெற்றியாளர்களும்:

ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுகல், பிரான்ஸ் ஆகிய நான்கு நாடுகள் அரையிறுதிச் சுற்றில் விளையாட தகுதி பெற்றன. இவற்றில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் மட்டுமே ஏற்கனவே உலகக் கோப்பையை வென்ற நாடுகளாகும்.

ஜெர்மனி இத்தாலி நாடுகளிடையில் நடைபெற்ற முதல் அரையிறுதிப் பந்தயத்தில் 0: 2 என்ற கோல் வித்தியாசத்தில் உலகக் கோப்பை பந்தயங்களை நடத்தும் நாடான ஜெர்மனியை வென்று இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது இத்தாலி அணி.

மற்றுமொரு அரையிறுதி பந்தயத்தில் உலகக் கோப்பை வரலாற்றில் புதுமுகமாக கோப்பையை வெல்லும் உறுதியோடு அரையிறுதிவரை முதன்முறையாக தேர்வாகி சிறப்பாக விளையாடிய போர்ச்சுகல் அணியை தங்களது திறமையான எதிர்கொள்ளல் மூலம் கட்டுப்படுத்தி 0: 1 என்ற கோல் கணக்கில் வென்றது பிரான்ஸ். காலிறுதிப் பந்தயத்தில் தனது அணியின் தியெரி ஹென்றி கோல் அடிக்க உதவியாக நின்ற பிரான்ஸ் அணியின் தலைவர் சினதேன் சிதான் அரையிறுதிப் பந்தயத்தில் ஹென்றியால் கிடைத்த பெனல்டி வாய்ப்பை அழகான கோலாக மாற்றி கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில் உலகக் கோப்பையின் இறுதி பந்தயத்தில் பங்கேற்கும் வாய்ப்பையும், ஒருவேளை உலகக் கோப்பையை வென்றெடுக்கும் வாய்ப்பையும் தனதாக்கியுள்ளார்.

உலகக் கோப்பை இறுதியாட்டம்:

கால்பந்து உலகக் கோப்பையின் இறுதி பந்தயம் இந்திய நேரம் ஞாயிறு இரவு 11.30 மணி சீன நேரம் திங்கள் அதிகாலை 2 மணிக்கு துவங்கவுள்ளது. இறுதியாட்டத்தில் இத்தாலியும், பிரான்சும் மோதுகின்றன. இதில் இத்தாலி அணி ஏற்கனவே மூன்று முறை உலகக்கோப்பையை வென்றுள்ளது. 1934, 1938, 1982 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகளை வென்றுள்ளது இத்தாலி அணி. ஆக 2006ம் ஆண்டு உலகக்கோப்பையை வெல்லும் பட்சம் 4 முறை உலகக்கோப்பையை வென்ற அணியாக இத்தாலி பெருமை பெறும். இறுதிப் பந்தயத்தில் நிற்கும் மற்ற அணியான பிரான்ஸ் அணி ஏற்கனவே ஒரு முறை உலகக்கோப்பையை வென்றுள்ளது. 1998ல் பிரான்ஸில் நடைபெற்ற உலகக்கோப்பையை தனதாக்கியது பிரான்ஸ். 2006ம் ஆண்டின் உலகக்கோப்பையை வென்றால் பிரான்சுக்கு இது 2வது உலகக்கோப்பை வெற்றியாகும். 2006ம் ஆன்டின் உலகக்கோப்பையின் வெற்றியாளர் யார் என்பது நாளை காலை தெரிந்துவிடும்.