• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-07 17:47:22    
ஷாங்காய் மாநகரில் வேலை செய்யும் வெளிநாட்டவர்கள்

cri
சீனப் பொருளாதாரத்தின் தொடர்ச்சியான விரைவான வளர்ச்சி, மேலும் அதிகமான வெளிநாட்டவர்களை ஈர்த்துள்ளது. தற்போது சீனாவின் மிகப் பெரிய வணிக நகரான ஷாங்காயில் 51 ஆயிரம் வெளிநாட்டவர்கள் வேலை செய்கின்றனர். முக்கியமாக, ஜப்பான், அமெரிக்கா, தென் கொரியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளைச் சேர்ந்த அவர்களில் பெரும்பாலோர், அந்நிய நிறுவனங்களில் அல்லது சீனாவிலுள்ள வெளிநாட்டு நிறுவனங்களின் நிரந்தரக் கிளைகளில் பணி புரிகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக, ஷாங்காயில் பன்னாட்டு நிறுவனத்தின் வட்டார தலைமையகம் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையம், அந்நிய முதலீட்டு வங்கிகள், செலாவணி மற்றும் காப்பீட்டு அமைப்புகள் இயங்குகின்றன. ஷாங்காய் மாநகரின் நவீன சேவைத் தொழிலின் அசுரவேக வளர்ச்சி, பல்வேறு நாட்டு வல்லுநர்களுக்கு விசாலமான சந்தைகளை வழங்குகின்றது. தவிரவும், ஷாங்காயில் குடியேறும் மற்றும் வேலை செய்யவரும் அந்நியர்களுக்கு பல முன்னுரிமைச் சலுகைகள் வழங்கப்படுகின்றன.