• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-18 17:19:11    
சீனாவில் இருந்து

cri
ஆஸ்திரேலியாவின் மத்தியப் பகுதியில் உள்ள அருன்ட்டா பூர்வகுடிகளிடையே பல சூரியன்கள் இருந்ததாகவும், அவை ஒவ்வொன்றாக விண்ணுக்குச் சென்றதாகவும் ஒரு நம்பிக்கை உள்ளது. மூதாதையர் ஆவி போன்று, சூரியன் பூமிக்கு அடியில் இருந்து முளைத்து, தீப்பந்தை ஏந்தியபடி, வானுக்குச் சென்று ஒளி தந்து விட்டு, மாலையில் திரும்பவும் பூமிக்குள்ளே இறங்கி விடுவதாகவும் கூறப்படுகிறது. சீனாவிலும் 10 சூரியன் கதை உண்டு. கிழக்கு சீனக் கடலுக்கு அப்பால் இருந்த டாங்கு (Tanggo) ஏரியில், தோன்றிய 10 சூரியன்கள் கிழக்கில் இருந்து மேற்காக காலை முதல் மாலை வரை நகர்ந்து விட்டு, மாலையில் டாங்கு ஏரிக்குள் இறங்கி விட்டதாகவும், அந்தச் சூரியன்கள் ஒவ்வொன்றையும் வில்வித்தையில் கெட்டிக்காரனான யி (Yi) அம்பு எய்து வீழ்த்தியதாகவும் நம்பிக்கை.

ஆஸ்திரேலியப் பூர்வகுடிகளின் மண உறவு எட்டுவர்க்கங்கள் என்ற அடிப்படையில் அமைந்தது. சீனாவிலும் அதே போல, திருமண பந்தத்தை உருவாக்கியவர்கள் பேரரசர் Fuxi நுவா தேவதை என்றும், ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்ட மூன்று எட்டு முக்கோணங்கள் அடங்கிய 64 எண்கோண வடிவங்களை Fuxi பேரரசர் கண்டு பிடித்த பின்னர், அவர் நுவா தேவதையை மணந்து திருமண பந்தத்தை உருவாக்கினார் என்றும் சொல்லப்படுகிறது.

வடக்கு ஆஸ்திரேலியப் பூர்வ குடிகள் தங்களது மூதாதையர் கடலுக்கு மேலாக பறந்து வந்து, குடியேறியதாகவும், அவர்கள் தங்களுடன் சடங்குச் சம்பிரதாயங்களையும், புனிதச் சடங்குப் பொருட்களையும் கொண்டு வந்ததாகவும் நம்புகின்றனர். சீனாவின் இடம்பெயரும் பறவைகள், ஆள்வசிக்காத கண்டத்தைக் கண்டறிந்து, கீழைத்திசையில் உள்ள தங்களது தாயகத்தில் உள்ள மற்ற விலங்குகளிடம் சொல்லவே, அப்போது ஆண் மற்றும் பெண் வடிவில் இருந்த விலங்குகள் படகுகளில் கடல் கடந்து சென்று, ஆள்வசிக்காத அந்தக் கண்டத்தில் குடியேறியதாக சீனப் புராணம் பற்றிய கதைகளில் சொல்லப்படுகிறது. கி.மு. 2ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட Huainan Zi என்ற நூலிலும், மலைகள் மற்றும் கடல்கள் பற்றி செவ்வியல் (The Classic mountains and seas) என்ற நூலிலும், கங்காருகளுக்குத் தரப்பட்டுள்ள விளக்கம் இந்தக் கதைகளுடன் ஒத்திருக்கிறது.

புராணக் கதைகள், மனித இனங்களின் வாய் மொழித் தன் வரலாறு எனக் கருதப்படுவதால், தென் சீனாவில் இருந்து மக்கள் அலை அலையாகக் குடிபெயர்ந்து உருவாக்கிய பூர்வ குடிகளே ஆஸ்திரேலியப்பூர்வ குடிகள் என்ற நம்புவதற்கு இடமிருக்கிறது.