• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-08 15:00:55    
ஊமையரின் வாழ்க்கை

cri
கிளீட்டஸ்.....அப்படியிருந்தால் செய்தியாளர் பேசியதை ஊமையரான மா யென் எப்படி அறிந்து கொண்டார்?

கலை..... டாக்டர் சன் யீ சியான் விளக்கத்தை கேட்ட பின் உங்கள் சந்தேகம் நீங்கலாம். அவர் கூறியதாவது.

கிளீட்டஸ்......தற்போது சந்தையில் பல மொழி ஒலி கண்டறியும் மென் பொருட்கள் உள்ளன. மொழி ஒலியை எழுத்துக்களாக மாற்றும் திறமை மென் பொருளுக்கு உண்டு. எங்கள் இந்த அமைப்பு முறையில் மைக் மூலம் மக்களின் மொழி ஒலி சேகரித்து ஊமையர்கள் கண்டறிய கூடிய மொழியாக்க வசதி வழங்கப்படுகின்றது.

கலை......ஊமையர்களுக்கும் மக்களுக்குமிடையில் இந்த மொழி கருவி மூலம் உரையாடல் நடைபெறுகின்றது.

கிளீட்டஸ்......எமக்கு தெரிந்தவரை இப்போது சீனாவில் சுமார் 2 கோடி மக்கள் செவித்திறன் இல்லாமல் இன்னல்களால் அல்லல்படுகின்றனர். அன்றாட வாழ்க்கையில் அவர்கள் பல இடங்களில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர்.

கலை.....ஆமாம். வங்கியில் பணம் சேமிப்பது, மருத்துவ மனையில் சிகிச்சை பெறுவது போன்ற விடயங்களில் இன்னல்கள் உள்ளன.

கிளீட்டஸ்......இந்த இன்னல்களை நீக்க பேச்சு மொழியை கண்டறியும் இந்த கை பன்னோக்க அமைப்பு முறை அவர்களின் வாழ்க்கைக்கு இன்பம் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. அல்லவா?

கலை.....ஆமாம். சீனாவின் பெய்சிங் மாநகரின் 3வது ஊமையர் பள்ளிக் கூடத்தில் பணிபுரிகின்ற ஆசிரியர் லீ இந்த அமைப்பு முறையை நன்றாக கிரகித்து பயன்படுத்துகின்றார். மாணவர்களுடன் பேசும் போது இந்த கை அமைப்பு முறை மூலம் உரையாடுகின்றார்.

கிளீட்டஸ்.....இந்த அமைப்பு முறையை பயன்படுத்துவதற்கு முன் அவர் மாணவர்களுடன் எப்படி உரையாடினார்?

கலை..... பிரச்சினையுடன் உரையாடினார். மாணவர்கள் ஊமையர்களாவர். ஒழுங்கான முறையில் பேசினால் அவர்கள் செவிமடுக்க முடியாது. சைகை மொழி மூலம் தான் பேச வேண்டும். ஆசிரியர் லீ அதிகமாக நேரம் செலவழித்து சைகை மொழியை கற்றுக் கொண்டார்.

கிளீட்டஸ்......இப்போது கை அமைப்பு முறை அறிமுகபடுத்தப்படடுள்ளது. மாணவர்களுடன் பேசும் போது எளிதானது அல்லவா?

கலை......ஆமாம். ஆனால் கணிணி மாதிரியாக இருக்கின்ற இந்த கை அமைப்பு முறை கருவியில் பல கம்புகள் பொருத்தப்படுகின்றன. எடுத்து செல்வது இன்னும் வசதி குறைவு.

கிளீட்டஸ்...... ஆசிரியர் லீ தவிர மற்றவர்கள் இந்த மொழியாக்கக் கருவியில் அக்கறை செலுத்துகின்றார்களா?

கலை.....ஆமாம். துங் வெய் அம்மையார் இந்த மொழியாக்கும் கருவியில் அக்கறை காட்டுகின்றார். ஏனென்றால் அவருடைய மகளுக்கு பேசி செவிமடுப்பதில் பிரச்சினை உண்டு. அவளுக்காக இந்த கருவியை வாங்க வேண்டும். ஆனால் விலை மிக அதிகம். இது வரை வாங்க முடியவில்லை.

கிளீட்டஸ்.....இந்த பிரச்சினையை எப்படி தீர்க்க வேண்டும்.?

கலை....இப்போது சீன அறிவியல் கழகத்தை சேர்ந்த கணிணி கழகத்தின் ஆய்வாளர்கள் விலையுடன் தொடர்புடைய மூல பொருட்களின் செலவை குறைப்பது பற்றி ஆராய்ந்து வருகின்றார்கள்.

கிளீட்டஸ்.....இந்த பிரச்சினை நிலவுகின்றது உண்மைதான். ஆனால் ஊமையர் சாதாரண மக்கள் போல் மற்றவருடன் இயல்பாக பேசுவதில் இந்த கருவி வசதி வழங்குகின்றது.

கலை......ஆமாம். ஊமையர்கள் சமநிலையில் சமூக வாழ்க்கையுடன் இணைவதற்கு இந்த கருவி வசதி ஏற்படுத்தி தருகின்றது. 16 வயதான தியென் பன் ஊமையர் பேசுவதில் தடை இருந்ததால் துன்பப்பட்டார். இப்போது புதிய அறிவியல் கருவியை வாங்கிய பின் அவர் மகழ்ச்சியடைந்து வாழ்க்கையுடன் நெருங்கிய உடன்பிறப்புகளுடன் பேசுகிறார்.

நான் சியென் பன். 16 வயதுடையவர். என் சைகை மொழி கருவி மூலம் ஒலியாக்கப்படுகின்றது. உங்களுக்கு சைகை மொழி தெரியாத போதிலும் நான் பேசும் மொழி உங்களுக்கு தெரியும் என்றார் அவர்.