• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-08 15:09:52    
உருளைக் கிழங்கு உணவு செய்முறை

cri
ராஜா.....அப்படியானால் நிறைய உருளைக் கிழங்கு தின்ன வேண்டுமா?

கலை......ஒரு வேளை உணவில் இரண்டு உருளைக் கிழங்கு தின்றாலே போதும். வயிறு நிறைந்து விடும். ஆனால் 200 கலோரி மட்டுமே கிடைக்கும். ஆகவே கலோரி அதிகரிக்குமே என்று பயப்பட வேண்டாம். மேலும் இதில் நார்ச்சத்து இருப்பதால் கொலஸ்ட்ரால் உடம்பில் சேர்வதைக் கட்டுப்படுத்துகின்றது. குடல் இயக்கமும் நன்றாக் நடைபெறுகின்றது.

ராஜா......அது சரி, அப்படியானால் நிறைய சிப்ஸ் தின்னலாம்.

கலை......அதுதான் தப்பு. சாதுவான உருளைக் கிழங்குக்கு கெட்ட பெயர் கொண்டு வந்ததே இந்த சிப்ஸ் தான்.

ராஜா.....சீனாவிலும் நிறையப் பேர் சிப்ஸ் தின்கிறார்களே.

கலை.....போனவருடன் மட்டும் சீனா 24 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 3285 டன் உருளைக் கிழங்கு சிப்ஸ் இறக்குமதி செய்திருக்கிறது. இது ஆபத்தானது. சீன முறைப் படி உருளைக் கிழங்கை சமைத்து உண்டால் ஆபத்து இல்லை.

ராஜா......அப்படியானால் ஒரு உருளைக் கிழங்கு உணவு செய்முறை சொல்லுங்களேன்.

 

கலை.....சொல்கின்றேன். சீன மக்களுக்கு கோடை காலத்தில் மிகவும் விருப்பமானது உருளை கிழங்கு கறி என்று சொல்லலாம். வானொலி நிலைய உணவு விடுதியில் இது அதிகம் விற்பனையாகிறது. இதன் பெயர் "டி சைன் சியேன்". ராஜா உங்களுக்கு நினைவிருக்கா?

ராஜா......ஆமாம் ஆமாம். நீங்கள் சொன்னதும் நினைவுக்கு வந்தது. குறிப்பாக அன்னிய நிபுணர்கள் இந்த உருளைக் கிழங்கு கறியை டி சைன் சியேன் என்று சொல்வோம்.

கலை......இந்த கறி சமைப்பதற்குக் தேவைப்படும் காய்கள் குடை இனிப்பு மிளகாய் அப்புறம் உருளை கிழங்கு, கத்தரிகாய் மூன்று வகை காய்கள் போதும்.

ராஜா.....சமைப்பதற்கு எளிதானது அப்படித்தானே.

கலை......ஆமாம். உருளை கிழங்கின் தோல் உரிக்க வேண்டும். அப்புறம் இந்த மூன்று வகை காய்களை சுத்தம் செய்து துண்டு துண்டாக நறுக்க வேண்டும். பின் அடுப்பில் வாணலியில் உணவு எண்ணெய் தகுந்த அளவில் ஊற்றுங்கள். அப்புறம் உருளை கிழங்கு துண்டுகளை முதலில் வாணலியில் போட்டு வதக்க வேண்டும். உருளை கிழங்கின் மேல் பகுதி கொஞ்சம் சிமப்பாக வதங்கிய பின் கத்தரிகாய் குடை மிளகாய் ஆகியவற்றை உள்ளே போட்டு கிளற வேண்டும்.

ராஜா..... அவற்றை வாணலியில் வதக்கும் போது நல்ல வாசனை வரும் போது காய்கள் வெந்து விட்டது எனலாம். அப்படிதானே.

கலை...... அப்படித்தான். சமைத்த பின் கொஞ்சம் உப்பு, மசலா பொருட்கள் ஆகியவற்றை தூவி சாப்பிடலாம்.