• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-20 16:46:36    
உலக ஜூனியர் தடகளப் போட்டிகள்

cri
11வது உலக ஜூனியர் தடகளப் போட்டிகள் நேற்று பெய்சிங்கில் 5வது நாளில் நடைபெற்றது. நேற்றைய நடைபெற்ற 9 விளையாட்டுகளின் இறுதிப் போட்டிகளில் சீன அணி 2 தங்கம், ஒரு வெள்ளி, மற்றும் 3 வெண்கல பதக்கங்களை பெற்றது. இதனால், இந்த உலக ஜூனியர் தடகளப் போட்டிகளில் சீன அணி பெற்ற பதக்கங்கள் எண்ணிக்கை கடந்த முறையைத் தாண்டியுள்ளது. நேற்று முற்பகல் நடைபெற்ற மகளிர் பத்தாயிரம் மீட்டர் நடைப் பந்தயத்தில் சீன வீராங்கனை லியூ ஹொங் 45 நிமிடம், 12.84 வினாடி என்ற சாதனையுடன் சீனாவுக்கு நான்காவது தங்கப் பதக்கத்தை பெற்று தந்தார். ஆடவருக்கான பத்தாயிரம் மீட்டர் நடைப் பந்தயத்தில் சீன வீரர் போ சியாங் துங் 42 நிமிடம், 50.26 வினாடி என்ற சாதனையுடன் சீனாவுக்கு இன்னொரு தங்கப் பதக்கத்தை அதிகரித்தார். இதுவரை, சீன அணி மொத்தம் 5 தங்கம், 3 வெள்ளி மற்றும் 5 வெண்கல பதக்கங்களை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. கெனிய அணி 5 தங்கம், 5 வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கங்களுடன் முதலாம் இடத்திலும் ரஷிய அணி 4 தங்கம், 2 வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கங்களை பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளன.